சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்!

Do You know how Raja Raja cholan collected the Saiva thirumurai!
Anmiga katturaiImage credit - panuval.com
Published on

ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரியங்கள்தான். ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் உயர்ந்து, நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோவிலை நமக்கு தந்தவர். ஆனால், இதையெல்லாம் விட ராஜ ராஜன் செய்த தலைசிறந்த விஷயம் என்ன தெரியுமா? இன்று நாம் படித்து மனமுருகும் தேவாரம் உள்ளிட்ட சைவத் திருமுறைகளை தொகுத்து வழங்குவதற்கு காரணமாக இருந்தவர் அவர்தான். இதைப் பற்றி விரிவாக இந்தப பதிவில் காண்போம்.

இன்று நமக்கு கிடைத்திருக்கும் சைவத்திருமுறைகள் அவ்வளவு எளிதாக நமக்கு கிடைத்தது இல்லை. அதை தொகுப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு கடின உழைப்பைப் போட்டு அதை சேகரித்து தொகுக்க உதவியது ராஜராஜ சோழன் என்னும் மாமன்னன்.

ராஜராஜசோழனின் அவையிலே சைவத் திருமுறைகளுடைய சில பாடல்களை பாடுவது வழக்கம். அந்த காலக்கட்டத்தில் சில பாடல்கள் மட்டும்தான் இருந்தது. பக்தி பொக்கிஷமான சைவத்திருமுறைகளின் முழு தொகுப்பையும் சேகரிக்க விரும்பினார் ராஜராஜ சோழன்.

சைவத்திருமுறைகள் இருக்கும் இடத்தை விநாயகரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோவில் அறையிலே அடைத்து வைக்கப்பட்டிருப்பதை தெரிந்துக் கொள்கிறார் ராஜராஜ சோழன். சிதம்பரம் நடராஜர் கோவிலிலே திருமுறைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையை ராஜ ராஜசோழன் திறக்க சொல்கிறார்.

ஆனால், தீட்சிதர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர் வந்தால் தான் அறையை திறப்போம் என்று சொல்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களை எப்படி அழைத்து வருவது என்று எண்ணிய ராஜராஜ சோழன் மூவரின் உருவத்தையும் ஐம்பொன்னால் செய்து அதை பள்ளக்கில் கொண்டு வந்து வைத்து அறையினை திறக்கச் செய்தார். அறையை திறந்துப் பார்த்தால், நிறைய ஒலைச்சுவடிகள் செல்லரித்து இருந்தன. மீதமிருந்த ஓலைச்சுவடிகளை நம்பியாண்டார் நம்பி பதினோரு திருமுறைகளாக தொகுத்தார்.

இதையும் படியுங்கள்:
சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?
Do You know how Raja Raja cholan collected the Saiva thirumurai!

இன்று தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் நமக்கு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது ராஜ ராஜ சோழனும், அதை தொகுத்து வழங்கிய நம்பியாண்டார் நம்பியும், திருமுறைகள் இருக்கும் இடத்தின் தகவலை நம்பியாண்டார் நம்பி மூலம் தெரிவித்த திருநாறையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையாரும் ஆவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com