எளிய பிரசாதம் மூலம் நோய் தீர்க்கும் சில திருத்தலங்கள் எதுவென்று தெரியுமா?

வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாதரை வணங்கி வழிபட தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும் இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.

சங்கரன்கோவில்

ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன் கோவில். இங்கு தரப்படும் புற்று மண் பிரசாதம் சகல சரும நோய்களையும் குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடாக பார்க்கலாம்.

திருச்செந்தூர்

விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம் இது.

ஸ்ரீமுஷ்ணம்

விருத்தாசலத்தில் அருகில் உள்ளது ஸ்ரீமுஷ்ணம். இங்கு உள்ள பூவராக சுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஸ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும். இது கோரைக்கிழங்கு மாசர்க்கரை  கற்பூரம் ஏலம் நெய் கலந்து செய்யப்படும். இந்த சூரணம் தீராத நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

பழனி

ழனி ஆலயத்தில் அதிகாலையில் தரப்படும் கபினி தீர்த்தம் மற்றும் சாற்று சந்தனம் எந்த நோயையும் குணமாக்கும் ஆற்றல் படைத்தது.

பழனி
பழனி

சின்ன பாபு சமுத்திரம்

விழுப்புரம் பாண்டிச்சேரி  சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது இங்கு சித்தர் படேசாயபு ஜீவசமாதி உள்ளது. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வழிபாடு நடத்துகின்றனர். செவ்வாய், வியாழன் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் வழிபாட்டில் கலந்துகொள்ள புற்றுநோய் தொழுநோய் காசநோய் போன்ற நோய்கள் குணமாகிறது.

தாடிக்கொம்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் அனைத்து வியாதிகளை நீக்கும் லேகியம் மற்றும் தைலம் அமாவாசை தோறும் செய்து தரப்படுகிறது.

இருக்கன்குடி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாள் என்றும் அழைக்கப்படுகிறாள். தீராத அம்மைநோய் கண்நோய் மற்றும் கைகால் போன்ற வியாதிகளையும் தீர்த்து வைக்கிறாள். சில குழந்தைகள் பெரியவர் களாகியும் கை சூப்பும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களை இங்கு கூட்டி வந்து பச்சை குத்திக் கொள்ள கை சூப்பும் வழக்கத்தை விடுவது கண்கூடாகும். சகல நோய்களையும் தீர்க்கும் அன்னையாக மழையைத் தரும் அன்னையாக மாரியம்மன் இருக்கிறாள்.

திருநின்றவூர்

சென்னையில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநின்றவூர். இங்குள்ள இறைவன்  இருதயாலீஸ்வரர். இருதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்க வல்லவர். இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்களும் இருதயநோய் வரக்கூடாது என்பதும் இங்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.

கோட்டூர்

விருதுநகர் சாத்தூர் நெடுஞ்சாலையில் ஆர் ஆர் நகர் அருகில் உள்ளது கோட்டூர். இங்குள்ள குருசாமி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் சென்று வழிபாடு நடத்துகின்றனர். இங்கு தரப்படும் எண்ணெய் நம் சருமத்தில் உள்ள சிலந்தி கட்டிகள் மற்றும் கட்டிகள் போன்றவற்றை குணமாகிறது.

கூரம்

காஞ்சிபுரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கூரம். இங்குள்ள கூரத்தாழ்வார் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் அரிய சக்தி உள்ளவர்.

திருவீழிமிழலை
திருவீழிமிழலை

திருவீழிமிழலை 

ஞ்சை திருத்துறைப்பூண்டி அருகில் உள்ளது திருவீழிமிழலை  ஆகும். இங்குள்ள பெருமாள் தன் கண்ணை கொண்டு சிவபூஜை செய்தார் என்பது சிறப்பானதால் ஞாயிறு தோறும் சிவனுக்கு தாமரை மலர் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு வந்து வணங்கி வழிபட்டால் கண் நோய் தீரும் என்பது திண்ணம்.

திருவாதவூர்

துரைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சிவன் வாதபுரீஸ்வரர் .சனி பகவானின் வாத நோய் குணமான திருத்தலம். எனவே இங்கு சிவனை வில்வம் கொண்டு திங்கட்கிழமையும் சனியை சனிக்கிழமையும் விளக்கு போட்டு வழிபட வாத நோய்கள் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
இந்த 3 அறிகுறிகள் இருந்தால் உங்கள் ரிலேஷன்ஷிப் முடியப்போகுதுன்னு அர்த்தம்! 
வைத்தீஸ்வரன் கோவில்

கல்லிடைக்குறிச்சி

ல்லிடைக்குறிச்சி ஸ்ரீ மானேந்தியப்பர் கோவிலில் பிரகாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஜுரகரேஸ்வரர் சிலையின் கிரீடத்தின் தலைமீது பக்தர்கள் ஜுரம் குறைய வேண்டி கொண்டு மிளகு அரைத்து பூசுகின்றார்கள். இவ்வாறு வீடுகளில் உள்ளவர்கள் காய்ச்சல் குறைய மூன்று நாட்கள் தொடர்ந்து மிளகு ஜூரகரேஸ்வரர் மீது பூச நோய் குறையும்.

பூவனூர்

நீடாமங்கலத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூவனூர். இங்கு ஸ்ரீ சதுரங்க வல்லப்பநாதர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சன்னதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் விஷக்கடிக்கு   வேர் மந்திரித்து கட்டுகிறார்கள். எலிக்கடியிலிருந்து எந்த விஷக்கடியானாலும் அறவே விஷம் நீங்கி போக்குகிறாள் அன்னை என்பது பக்தர்களின் அனுபவமாகும்.

சிவன்மலை

கோவை மாவட்டம் சிவன்மலையில் சுற்றி வலம் வரும்போது பரமேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு சிவனை வழிபட்ட அனுமார் சன்னதி உள்ளது இக்கோவிலில் அனுமார் சன்னதியில் தாழியில் இருக்கும் நெய் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com