இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உருவான வரலாறு தெரியுமா?

Irukkankudi Mariamman Temple
Irukkankudi Mariamman TempleImage Credits: Maalaimalar
Published on

துவரை பார்த்த அனைத்து மாரியம்மன் கோவில் களிலும் அம்மன் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டபடி இருப்பார். ஆனால், இந்தக் கோவிலில் இருக்கும் மாரியம்மன், ‘இந்த அண்ட சராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நான் இன்றி ஒரு அணுவும் அசையாது’ என்பதற்கு ஏற்றவாறு வலது காலை மடித்து இடதுகாலை தொங்க விட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பம்சம் ஆகும். இத்தகைய சிறப்பு மிகுந்த இருக்கன்குடி மாரியம்மன் எப்படி தோன்றினார் என்று தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் சிறிய கிராமமாக இருந்தது. இங்கு பெரும்பான்மையாக விவசாயம் செய்யும் மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் விவசாயத்திற்காக ஒரு பெண் கூடையில் சாணம் சேர்த்துக் கொண்டிருந்தாள். கூடையில் ஓரளவிற்கு சாணம் சேர்ந்ததும் அதை அவ்விடத்திலிருந்து எடுக்க முடியவில்லை. பிறகு அந்த பெண் அருள் வந்து, அந்த கூடையிருக்கும் இடத்தில் புதைந்திருக்கும் தன்னை எடுத்து கோவில் அமைத்து வேண்டினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தாள்.

அதன் பிறகு மக்கள் அவ்விடத்தை தோண்டி மாரியம்மனின் சிலையை எடுத்து கோவில் அமைத்து வழிபட தொடங்கினர். இந்த கோவில் வைப்பாறு மற்றும் அர்ஜூனா ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே உள்ள மணல் திட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கிழக்கு-மேற்காக 178 அடியும், வடக்கு-தெற்காக 149 அடியும் அமைந்துள்ளது.

மேலும் கோவிலின் தெற்கு பக்கம் வைப்பாறு மற்றும் வடக்கு பக்கம் அர்ஜூனா ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் சேர்ந்து வருவதால் ‘இருகங்கைக்கூடும் இடம்’ என்று சொல்லப்பட்டு வந்தது. பிறகு இவ்விடத்தில் அம்மன் குடிக்கொண்டு விட்டதால் இருகங்கைக்கூடும் இடம் என்பது மாறி ‘இருக்கன்குடி’ என்றானது.

இதையும் படியுங்கள்:
முருகப்பெருமானுக்கு தமிழ் மேல் உள்ள பிரியம் பற்றித் தெரியுமா?
Irukkankudi Mariamman Temple

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஆடி திருவிழா இங்கு வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. கண் பிரச்னை, அம்மை, வயிற்று வலி, கைக்கால் வலி போன்ற பிரச்னைகளுக்கு மாரியம்மனை வேண்டினால் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com