அதியமான் கட்டிய கோட்டை பைரவர் கோவில் எங்குள்ளது தெரியுமா?

கோட்டை பைரவர் கோவில்...
கோட்டை பைரவர் கோவில்...

ர்மபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் 7கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தட்சிண காசி கால பைரவர் கோவில். தர்மபுரியில் இருந்து அதியமான் கோட்டைக்கு செல்லும் பேருந்தில் ஏறி செல்லலாம். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் காசிக்கு அடுத்த படியாக கால பைரவருக்காக இருக்கும் கோவில் என்ற பெருமையை கொண்டுள்ளது.

இது கடையேழு வள்ளல்களுள் ஒருவராக போற்றப்பட்ட அதியமான் கட்டிய கோவிலாகும்.

ருமுறை அதியமானுக்கு ஒரு அபூர்வமான நெல்லிக்கனி கிடைத்தது. அந்த நெல்லிக்கனியை உண்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும் அதியமான் அந்த நெல்லிக்கனியை உண்ணாமல் ஔவை பிராட்டிக்கு கொடுத்தார். தமிழின்பால் அவர் கொண்டிருந்த பற்றினால் இவ்வாறு செய்தார்.

கோட்டை பைரவர் கோவில்...
கோட்டை பைரவர் கோவில்...

அப்பேற்பட்ட புகழை உடையவர் அதியமான் என்றாலும், சிற்றரசன் என்ற காரணத்தால் எதிரி நாடுகள் படையெடுத்து வரும் என்ற அச்சம் அவருக்கு எப்போதும் இருந்தது.

தன்னுடைய மனநிம்மதிக்காகவும், நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தெய்வ சக்தியின் துணை வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டார். அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான காலபைரவர்தான் என்பதையும் புரிந்து கொண்டார்.

இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கால பைரவர் சிலை காசிக்கே சென்று எடுத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதியமான் இக்கோவிலுக்கு தவறாமல் வந்து வழிப்பட்டு எதிரிகளிடமிருந்து தன்னுடைய நாட்டை காத்தார் என்று நம்பப்படுகிறது. நீண்ட காலமாகவே தன்னுடைய கோட்டையின் சாவியை இந்த கோவிலிலே வைத்து விடுவார், ஏனெனில் கால பைரவரை அவர் காவல் தெய்வமாகவே கருதினார்.

இதையும் படியுங்கள்:
ருசிக்க ரசிக்க சூப்பர் சென்னா மசாலா கிரேவி!
கோட்டை பைரவர் கோவில்...

இந்தக் கோவிலில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், நவக்கிரகத்தை கூறையில் வடிவமைத்து வைத்துள்ளனர். எனவே, எவர் ஒருவர் கூறையின் கீழ் நடந்து சென்றாலுமே எல்லா கோள்களினால் வரும் பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.

பெளர்ணமியிலிருந்து 8வது நாளான கிருஷ்ணபக்ஷா அஸ்தமியன்று முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அன்று மட்டும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் வெள்ளை பூசணியில் விளக்கேற்றி கோவிலை 18 முறை சுற்றி வருவார்கள். இதனால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

இந்தப் பூஜையை தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமை அல்லது 3 கிருஷ்ணபக்ஷா அஸ்தமி நாட்களில் செய்ய வேண்டும்.

 கீழே கால பைரவர்
கீழே கால பைரவர்

இப்படி செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும், நவக்கிரக தோஷம் நீங்கும், சனி தோஷம், பில்லி சூன்யம் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தேய்பிறை, அஷ்டமி போன்ற நாட்களில் 1018 கிலோ காய்ந்த மிளகாய், 108 கிலோ மிளகை வைத்து குருதி ஹோமம் செய்யப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் வாரணாசியிலிருந்து எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 18 ஆயிரம் ருத்ராட்ச கொட்டைகளை வைத்து அமைக்கப்பட்ட பந்தலுக்கு கீழே கால பைரவர் அழகாக காட்சி தருகிறார். அவரை காண்பதற்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com