எள் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவதன் அவசியம் என்ன தெரியுமா?

எள் எண்ணெய்
எள் எண்ணெய்www.exprestamil.com

வீடுகளில் சாதாரணமாக காலையும் மாலையும் ஆறு மணி வாக்கில் எல்லோரும் விளக்கு ஏற்றுவது உண்டு. சில நாட்களில் முன்னே பின்னே ஏற்றுவது மற்றும் இன்னும் சில நாட்களில் நேரம் ஆகிவிட்டால், வீட்டில் உள்ள பெரியவர்கள் இன்னுமா நல்ல விளக்கு பொருத்தவில்லை என்று சற்று ஆதங்கத்துடன் கேட்பார்கள். அதிலிருந்தே நல்ல எண்ணெயில் விளக்கு ஏற்றுவதன் அவசியத்தை புரிந்து கொள்ளலாம். 

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தில் என்ன பொருள் விளைகின்றதோ, அந்த எண்ணெய் வித்துக்களை கொண்டு எண்ணெய் ஆட்டி அதை பூஜிக்கும் விளக்குகளில் ஊற்றுவது நாம் அறிந்ததே. ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் எள் எண்ணெய் தனித்துவம் மிகுந்தது. எள் எண்ணெயில் விளக்கு ஏற்றுவதால் பல்வேறு நன்மைகளை நாம் அடைகின்றோம். இதனால் சுற்றுப் புறமும் சுகாதாரமாக ஆகிறது. அப்படி எள்  எண்ணையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

குத்துவிளக்கில் எள் எண்ணெய் விட்டு பற்ற வைக்க வேண்டும் என கூறும்போது அது எந்த எண்ணையானால் என்ன? விளக்கு எரிந்தால் சரிதானே என்று பலரும் பதிலளிக்கலாம். ் 

இது முற்றிலும் தவறு. கண்டிப்பாக எள் எண்ணெய் குத்துவிளக்கில் ஊற்ற வேண்டும். சனி தேவனை துதித்து ஆசி பெறவே எள் எண்ணெய் உபயோகிப்பது. எள்ளெண்ணெய் சனி கிரகத்தின் பிரதிநிதியாக கருதப்படுகின்றது. எள் எண்ணெய் இரும்பு சத்து அடங்கியது என்பது நம்மில் பலருக்கும் இப்பொழுது தெரியும். முன்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம் நாட்டில் இரும்பு சத்து பற்றாக் குறையால் வரும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

எள் எண்ணெய்
எள் எண்ணெய்

பண்டைய காலத்தில் இதை அறிந்திருந்ததனால் விளக்கிற்கும், குளிப்பதற்கும், சமையலுக்கும்  பயன்படுத்தி வந்தனர். இதனாலேயே இடைப்பயிராக பெரும் பகுதி எள் பயிரிடப்பட்டிருந்தது . நோயுற்று மருத்துவரிடம் செல்லும்போது மருத்துவர் இரும்பு மாத்திரைகளும் டானிக்குகளும் பரிந்துரை செய்யும்போதெல்லாம் நமக்கு எள்ளின் மேன்மை தெரியாமல் போகின்றது. எள் எண்ணெய் உபயோகித்து விளக்கு எரியும்போது சுற்றுச்சூழலில் இரும்பின் பிராண சக்தி பரவி இருப்பதை நாம் அறிகிறோம். இரும்பின் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இதன் சக்தியின் உறைவிடமான சனி கிரகத்திலிருந்து சக்தியை இழுத்தெடுக்க சாஸ்தா மற்றும் பல்வேறு வகை வகையான கோயில்களை பல இடங்களிலும் அமைக்க பண்டையவர்கள் தயாரானார்கள். 

அதேபோல் எண்ணெயை ஒருமுறை உபயோகித்தால் அது சூடாகும் போதே அதில் கார்பன் உருவாகும். அவ்வாறு கார்பன் உருவான எண்ணெயில் வேறு எண்ணெய் சேர்த்தாலும் அதே எண்ணையை பயன்படுத்தினாலும்,  தயாராகும் உணவு பொருளில் தீங்கு விளைவிக்கும் கூட்டுப் பொருட்கள் உருவாகும் என்று கண்டறிந்துள்ளனர். இந்த உண்மையை புரிந்து கொண்டதால் விளக்கில் தூய்மையான நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 

மேலும் கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகளில் எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் மனித உடலில் செம்பு, வெள்ளி, ஈயம் என்ற உலோகங்களின் பற்றாக்குறை ஓரளவு குறையும். அதோடு இரும்பு சத்தும் கிடைக்கப் பெறலாம். தங்க நகைகள் அணிந்து கலப்பு விளக்குகளில் எள் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தினால் பஞ்சலோகத்தின் நன்மைகள் நமக்கு கிடைப்பதுடன், எள் எண்ணெய் இரும்பு சக்தியும் சேர்ந்து வரும் போது எரியும் சுடரைச் சுற்றிலும் ஆரோக்கிய சக்தி பரவுகின்றது. அவை நோய் வரும் காரணங்களை அழித்துவிடும் என்று சாஸ்திர பூர்வமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விருந்தினர்கள் விரும்பும் வரவேற்பறையை அமைப்பது எப்படி?
எள் எண்ணெய்

இதை துஷ்ட மூர்த்திகளை அழிக்கும் சக்தி என்று பாட்டிமார்கள் கூறுகின்றனர். பகலில் சூரியன் காவல்காரனாக இருப்பதுபோல் இரவில் கலப்பு விளக்கில் ஒளிரும் சுடர் மனிதர்க்கு ரட்சகன் ஆகவும் காவல்காரனாகவும் இயங்குவதாக முதியோர்கள் கூறுகிறார்கள். 

இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை எள்ளெண்ணெய் கொடுப்பதால், அவற்றை எல்லா விளக்குகளிலும் ஊற்றி பயன்படுத்த வேண்டும் என்று ஆதிகாலம் முதல் கூறப்பட்டு வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com