நெற்றிக்கண் கொண்ட நரசிம்மர் கோவில் எங்குள்ளது தெரியுமா?

Do you know the temple where Lord Narasimha with third eye is located?
Narasimmar...
Published on

‘நெற்றிக்கண்’ என்றாலே சிவபெருமானே நினைவிற்கு வருவார். ஆனால், இந்த சிறப்பு வாய்ந்த நரசிம்மர் கோவிலில் நரசிம்மருக்கு நெற்றிக்கண் இருக்கிறது என்பது அதிசயமாக உள்ளதல்லவா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள குடைவரை கோவிலான சிங்கப்பெருமாள் கோவில் ஒரு சின்ன குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பெருமாள் கோவிலை 'பாதலாத்திரி கோவில்' என்றும் அழைப்பர்.

புராணக் கதையின்படி, நரசிம்மர் அசுரனான ஹிரண்யனை கொன்ற பிறகு உக்கிரமான உருவில் இருந்தார். அப்போது இக்கோவில் அமைந்துள்ள இடம் அடர்ந்த காடாக இருந்தது. இங்கே ‘ஜபாலி’ என்னும் முனிவர் நரசிம்மரின் உக்கிரமான தோற்றத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக தவமிருந்தார். அந்த முனிவரின் தவத்தினால் மனம் குளிர்ந்த நரசிம்மர் உக்ர நரசிம்மராக  காட்சியளித்தார். இங்குள்ள குளத்தில் குளித்தபின் நரசிம்மரின் உக்ரம் அடங்கியதாகவும் அதற்கு பிறகு கோவில் குளம் சிவப்பாக மாறியதாக சொல்லப்படுகிறது.

சிங்கப்பெருமாள் கோவிலின் கருவறை குகைக்குள் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு 500 படிகட்டுகள் ஏறி மேலே செல்ல வேண்டும். இக்கோவிலில் உள்ள உக்ர நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்தியவாறு காட்சி தருகிறார். இக்கோவிலுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால், பக்தர்கள் நரசிம்மரின் மூன்றாவது கண்ணை தரிசிக்கலாம். 

நரசிம்மரின் நெற்றிக்கண்ணை தரிசிப்பதால், வாழ்வில் உள்ள துன்பங்கள், இன்னல்கள் விலகும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இங்கே அஹோபிலவல்லியாக லஷ்மி தேவி காட்சியளிக்கிறார். பக்தர்கள் நரசிம்மரை சுற்றிவர வேண்டும் என்று எண்ணினால் மலையை சேர்த்து சுற்றிவர வேண்டும். இக்கோவிவில் ‘கிரி பிரதக்ஷணம்’ மிகவும் பிரபலமாகும்.

இதையும் படியுங்கள்:
மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட சிவன் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?
Do you know the temple where Lord Narasimha with third eye is located?

சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள உக்ர நரசிம்மரை வழிப்பட்டால், கடன் தொல்லை, வழக்கு பிரச்னை, செல்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை, சனி மற்றும் ராகு தோஷங்கள் நீங்கும். இங்கே உள்ள அழிஞ்சல் மரத்தில் தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டினால் குழந்தை பேருக்கிட்டுவதாகவும், நெய் விளக்கேற்றி வழிப்பட்டால், கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் சொல்லப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த இந்தக் கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிப்பது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com