மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட சிவன் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?

Shiva temple built by Manika Vasagar.
Atmanatha Swamy Temple
Published on

திருவாசகம்’ எழுதிய மாணிக்கவாசகர் முக்கியமான நான்கு நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மதுரையில் வாழ்ந்து வந்தார். 'அரிமார்த்தன பாண்டியன்' என்னும் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிவபெருமானின் கட்டளையின் பேரில் சிவன் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒருமுறை மாணிக்கவாசகர் மன்னரின் உத்தரவின்படி குதிரை வாங்க திருப்பெருந்துறைக்கு வருகிறார். அப்போது சிவநாமம் ஒலிக்கும் சத்தம் கேட்டு அங்கே சென்று பார்க்கிறார். அங்கே குருந்த மரத்தடியில் குரு ஒருவர் அமர்ந்து சீடர்களுக்கு உபதேசம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னையும் ஏற்றுக்கொண்டு உபதேசம் அளிக்கும்படி மாணிக்க வாசகர் கேட்டுக்கொள்ள குருவும் ஒப்புக்கொண்டு அவரையும் ஏற்றுக்கொள்கிறார். குருவின் உபதேசத்தை கேட்டு சிவநிஷ்டையில் ஆழ்ந்து போகிறார் மாணிக்கவாசகர்.

சிவநிஷ்டையில் இருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாததைக் கண்டு சிவபெருமான்தான் தனக்கு குருவாக வந்தது என்பதை தெரிந்துக் கொள்கிறார். உள்ளம் உருக சிவப்பெருமானை நினைத்து பாடுகிறார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவிலை கட்டி சிவதொண்டில் ஈடுபட தொடங்கினார்.

மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாக வந்து உபதேசித்த இடம் என்பதால், இக்கோவிலுக்கு சென்று வழிப்படுவோருக்கு கல்வியில் சிறந்து விளங்குவதோடு  மட்டுமில்லாமல் சிறந்த ஞானம் பெற்றவர்களாகவும் திகழ்வார்கள்.

திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவில் 275 பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். இக்கோவிலை ஆவுடையார் கோவில் என்று அழைத்தாலும், 'ஆத்ம நந்தசுவாமிகள்' என்பதே இக்கோவிலின் பெயராகும். இக்கோவில் சிற்பங்களின் கலைநயத்துக்கு பெயர் பெற்றதாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தங்கத்தால் ஆன தகடுகள் வைக்கப்பட்டிருப்பதுபோல இக்கோவிலில் செம்பினாலான தகடுகள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தெய்வீக மணம் கமழும் 'கந்த சஷ்டி கவசம்' உருவான கதை தெரியுமா?
Shiva temple built by Manika Vasagar.

சூரிய கிரகணம், சந்திர கிரண நாட்களில் கூட ஆறுகால பூஜைகள் இக்கோவிலில் சிறப்பாக நடைப்பெறுகிறது. ‘இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை’ என்று நம்பப்படுகிறது.  திருமஞ்சனம், திருவாதிரை போன்ற பண்டிகைகள் இக்கோவிலில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. எனவே, இத்தகைய பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்ட இக்கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com