சரஸ்வதி நதி உற்பத்தி ஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

Shri Koteshwar Mahadev Temple
Shri Koteshwar Mahadev TempleImage Credit: Tripadvisor
  • 51 சக்தி பீடங்களில் ஒன்றான அம்பாஜி கோயிலுக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவில் கோடீஷ்வரர் எனும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

  • சுவாமி பெயர் கோடீஷ்வரர். கிராமத்தின் பெயர் இந்த ஈசனின் பெயரை வைத்து அழைக்கப்படுகிறது.

  • இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அருகிலேயே சரஸ்வதி நதி உற்பத்தி ஸ்தலம் உள்ளது.

  • இந்தியாவின் கடைசி கிராமமான (பத்ரிநாத்துக்கு மேல் அமைந்துள்ள) மானா வில்லேஜில் (Mana village) மறைந்திருந்த சரஸ்வதி நதி ‘ஹோ’ என்ற இரைச்சலுடன் இங்கு வெளிப்படும்.

  • சுற்றிலும் பெரும் பாறைகள் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் வெளிப்படும் இந்நதியானது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே இங்கு தண்ணீர் கொட்டுகிறது.

  • இந்த சரஸ்வதி நதியிலிருந்து தண்ணீர் எடுத்து அருகில் உள்ள சிவனுக்கு அபிஷேகிக்கலாம்.

  • அருகிலேயே வில்வ பத்திரம், ஊமத்தங்காய், மலர்கள் எல்லாம் கிடைக்கின்றன. அவற்றை வைத்து பூஜையும் செய்ய முடிகிறது.

  • மிகவும் அமைதி ததும்பும் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ள கோடீஸ்வரர் லிங்கத்தையும், சரஸ்வதி நதியையும் வழிபாட்டலாம்.

  • மிகவும் புகழ்பெற்ற பழமையான சிவன் கோயில் இது. இந்த இடம் அதிகம் பேருக்கு தெரியாததால் கூட்டம், நெரிசல் இல்லாமல் அமைதியாக தரிசனம் செய்ய முடிகிறது.

  • இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கோயிலைச் சுற்றி 51 சக்தி பீடங்களின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இது காஞ்சிபுரம் சங்கர மடத்தால் பராமரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவனின் கோபத்தால் உருவான வெந்நீர் ஊற்று எங்கிருக்கிறது தெரியுமா?
Shri Koteshwar Mahadev Temple
  • சரஸ்வதி ஆற்றின் தண்ணீர் மலையிலிருந்து தோன்றி வருவதால் மிகவும் ருசியாகவும், சில்லென்று ஐஸ் போலும் உள்ளது.

  • கோயிலுக்கு அருகில் ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் ஆசிரமம் உள்ளது. இவர் இங்கு சில காலம் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com