வாஸ்து பிரச்சனைகளை நீக்கும் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?

பூமிநாதர் திருக்கோவில்
பூமிநாதர் திருக்கோவில்image credit - youtube.con

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு யாருக்குத் தான் இருக்காது? அந்த கனவு நிறைவேற இந்த திருக்கோவில் துணை புரியும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

விரைவில் சொந்த வீடு வாங்க, புதிய வீடு கட்டுமான தொடங்கியதும் வாஸ்து குறைகளால் ஏற்படும் தடங்கல், நிலம், மனை விற்பதில் தடை, பூர்வீக சொத்து வழக்கு பிரச்சனை நிழுவையில் உள்ளது போன்ற பிரச்சனைகளை தீர்க்க செல்ல வேண்டிய கோவில், மிகவும் சக்தி வாய்ந்த வாஸ்து கோவிலைப்பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூரில் அமைந்திருக்கும் பூமிநாதர் திருக்கோவில்தான் அந்த சக்தி வாய்ந்த பரிகாரஸ்தலம். பூமியில் உள்ள 16 வகை பிரச்சனைகளை நிவர்த்தி செய்யக்கூடிய கோவில் என்று அகத்தியர் ஓலைச்சுவடியில் இந்த கோவிலைப் பற்றி எழுதியுள்ளார்.

வாஸ்து பிரச்சனை,  சொத்து பிரச்சனை, நிலப்பிரச்சனை, வழக்கு நிழுவை, போன்றவற்றை சரி செய்யும். எந்த இடம் பிரச்சனையில் உள்ளதோ அந்த இடத்தில் உள்ள வடக்கிழக்கு மூலையில் உள்ள மண்ணை 3 கைப்பிடி ஒரு மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து சாமியிடம் பூஜை செய்து திருப்பி எடுத்து வந்து பூஜையறையில் வைத்து விட வேண்டும். பூஜை செய்த அடுத்த 5 நாளைக்குள் எடுத்த இடத்தில் அந்த மண்ணை போட்டுவிட வேண்டும். எழுமிச்சை பழத்தை குங்குமம் தடவி அந்த இடத்தில் பிழிந்துவிட்டு வைத்து புதைத்துவிட வேண்டும். பின்பு சூடம் ஏற்றி வேண்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து மஞ்சள் துணியில் 5 ரூபாயை முடிந்து வைத்துவிட வேண்டும். நாம் மனதில் நினைத்த காரியம் 3 முதல் 5 மாதத்திற்குள் நிறைவேறிவிடும். நினைத்தது நடந்த பிறகு 5 ரூபாயை எடுத்து வந்து இங்கே அபிஷேகம் செய்ய வேண்டும்.

இக்கோவில் பூமியில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும் என்று அகத்தியர் கூறியுள்ளார். இங்கே வன்னி மரம், வில்வ மரம் என்று  இரண்டு தலவிருட்சம் உள்ளது. இறைவனின் பெயர் பூமிநாதர். இங்குள்ள அம்பாளின் பெயர் தர்மசம்பர்தினி. அதனால் தர்மமான முறையில் கோரிக்கைகள் வைக்க வேண்டும்.

இங்குள்ள நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியிருக்கும், சூரியன் சனியை நோக்கியிருக்கும். இங்கே ராகு, கேது சர்ப்பமாக இல்லாமல் முழுமையாக இருக்கிறார்கள். சொத்து பிரச்சனை, மண் சம்மந்தமாக இருக்கும் பயம் போன்றவற்றை போக்குவார். சொத்து சேரவேண்டும் என்ற வேண்டுதலையும் நிறைவேற்றி வைப்பார்.

இதையும் படியுங்கள்:
தங்கம் சேர வேண்டுமா? அப்போ கண்டிப்பா இந்த கோவிலுக்குப் போங்க!
பூமிநாதர் திருக்கோவில்

இக்கோவில் புராணத்தை பார்க்கலாம். அந்தகன் என்னும் அசுரன் தேவலோகத்திற்கு சென்று அங்குள்ள தேவர்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்து கொண்டிருந்தான். இதனால் தேவர்களை இதைப்பற்றி சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவனும் அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது ஈசனின் நெற்றியிலிருந்து ஒரு துளி வியர்வை பூமியில் விழுந்தது. அதிலிருந்து பூதம் கிளம்பியது. பூதம் ஈசனை நோக்கி தவமிருந்தது. ஈசனும் அதன் முன்பு தோன்றி வேண்டிய வரம் கேள் என்றார். மூன்று உலகையும் எரித்து அழிக்கும் திறன்  வேண்டும் என்று கேட்டது. ஈசனும் அந்த வரத்தை கொடுத்தார். இதனால் பூதம் பூமியை விழுங்க முற்பட தேவர்கள் அதை தடுத்து குப்புற கவிழ்த்தி அழுத்தி பிடித்துகொண்டனர். எனக்கு பசிக்கிறது உணவளியுங்கள் என்று பூதம் கேட்டது. எனவே தேவர்கள் பூமியில் வீடு கட்டும்போது படைக்கும் அனைத்தும் உனக்கு வந்து சேரட்டும் என்றனர்.

அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட நாளில் 1 ½ நாழிகையே உனக்கு எழுவதற்கு அனுமதியுண்டு. பூலோக வாசிகள் வீடு கட்டும் உணவுகள் உன்னை வந்து சேர்வதால் உனக்கு வாஸ்து புருஷன் என்று பெயரிடுகிறோம் என்று கூறினர். இந்த இடத்தில் சிவபெருமானுக்கு கோவில் கட்டியதால் அவருக்கு பூமிநாதன் என்ற பெயரும் வந்தது. இங்கே சிவன் வாஸ்து கடவுளாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். எனவே இக்கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று இறைவனை வழிப்படுவது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com