Ponvasinathar Temple
Ponvasinathar TempleImage Credits: Maalaimalar

தங்கம் சேர வேண்டுமா? அப்போ கண்டிப்பா இந்த கோவிலுக்குப் போங்க!

Published on

ங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை?  நம் வாழ்வில் உள்ள சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி கொள்ளத்தானே உழைக்கிறோம். இருப்பினும் நகை சேரவேண்டும் என்று இந்த ஆலயத்தில் வந்து வேண்டிக்கொண்டு சென்றால், நிச்சயமாக ஏதோ  ஒரு வழியில் தங்கம் வந்து சேரும் என்று சொல்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இழுப்பூர் என்ற ஊரில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பொன்வாசி நாதர் திருக்கோவில்தான் இத்தனை சிறப்புகளையும் உடையது. இந்த கோவிலில் வந்து வேண்டிக்கொண்டால் களவுப்போன தங்கநகை திரும்ப கிடைக்கும், திருமணத்தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கிருக்கும் சிவபெருமானை பொன்வாசிநாதர் என்று அழைப்பார்கள். அம்பாள் சொர்ணாம்பிகை மற்றும் பொன்னம்மாள் என்ற திருப்பெயரால் அழைக்கப் படுகிறார். இந்த ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டுக்கள் குலசேகரப்பாண்டியன் மற்றும் சுந்தரப்பாண்டியனது கல்வெட்டிகளாக இருப்பதால், இந்த ஆலயம் சுமார் 800 வருடம் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. பட்டினத்தார் இக்கோவிலில் சிவபெருமானை போற்றி பாடல் பாடியுள்ளார். வராக முனிவர் இக் கோவிலில் சிவப்பெருமானை நோக்கி தவம் புரிந்துள்ளார் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

அம்பாளை சொர்ணாம்பாள் என்று அழைக்கிறார்கள். இவரின் இன்னொரு பெயர் பொன்னம்மாள் ஆகும். இங்கே அம்பாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவப்பெருமான் பொன்வாசிநாதராக காட்சி தருகிறார். இவரின் மற்ற பெயர்கள் ஹேமவிருத்தீஸ்வரர் மற்றும் பொன்வளர்ச்சிநாதராகும். இதுவே நாளடைவில் மருவி பொன்வாசிநாதர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், மகிழ மரமும் உள்ளது.

இக்கோவிலின் இறைவனையும்,இறைவியையும் வணங்கும்போது தட்டில் நகைகளோடு ஆராதனை செய்து வணங்கிவிட்டுத்தான் நகைக்கடையையே தொடங்குவார்களாம். அதனால் அவர்கள் தொழில் சிறந்து விளங்கியதாக சொல்லப்படுகிறது. புதிதாக நகை வாங்கியவர்கள் அந்த நகையை பூஜைத்தட்டில் வைத்து இறைவன், இறைவியை ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது. அப்படி செய்வதால் மேலும் நகை சேரும் என்ற நம்பிக்கையுள்ளது. நகை களவு போனவர்கள் இந்த சிவப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டால் களவு போன பொருள் 1 மண்டலக்காலத்தில் திரும்ப கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிக அழகிய பூக்களைப் பற்றித் தெரியுமா?
Ponvasinathar Temple

இத்தளத்தில் வீற்றிருக்கும் இறைவனையும், இறைவியையும் அக்ஷய திருநாளில் வழிப்பட்டால் அனைத்து நல்லதும் நடக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் 10 நாட்கள் பிம்மோச்சவம் நடைப்பெறுகிறது. 8ஆம் நாம் திருக்கல்யாண உற்சவமும், 9 ஆம் நாள் தேரோட்டமும் நடைப்பெறும். முருகனுக்கு சூரசம்ஹாரம் இங்கே நடத்தப்படுகிறது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எழுமிச்சைப்பழத்தில் விளக்கேற்றுவது சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. எனவே இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு சென்று நீங்களும் தரிசனம் பெற்று வாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com