உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் எது தெரியுமா?

உத்திரகோச மங்கை சிவன் கோவில்
உத்திரகோச மங்கை சிவன் கோவில்

ப்பூவுலகில் எண்ணற்ற கோவில்கள் தோன்றியிருக்கிறது, இன்னும் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறன. அத்தனை கோவில்களும் தன்னுள் எண்ணற்ற ரகசியங்களை புதைத்து வைத்திருக்கிறன. எனினும் உலகிலேயே முதல் முதலில் தோன்றிய சிவன் கோவில் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோச மங்கை சிவன் கோவிலேயாகும். இந்த கோவில் 3000 வருடம் பழமையானதாகும். இக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ராமநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத்தளம் மற்றும் சுற்றுலாத்தளமாகும்.

இக்கோவிலில், மங்களாம்பிகை, நடராஜர் ஆகியோர் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறார்கள். இந்த கோவிலில் மிகவும் பழமையான 6 அடியிலே உள்ள மரகத நடராஜர் சிலை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த 6 அடி மரகதத்தால் ஆன நடராஜர் சிலை வருடம் முழுவதும் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் மரகதம் மிகவும் மென்மையான கல்லாகும். இதற்கு அதிகப்படியான  ஒளி, ஒலியை தாங்கும் சக்தி கிடையாது என்பதால் சந்தன காப்பு போடப்பட்டிருக்கும். எனினும் ஆண்டுக்கு ஒருமுறை ஆதிரை நாளன்று சந்தன காப்பு விலகப்பட்டு மரகத நடராஜர் தரிசனம் தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்தல புராணத்தின்படி, ஒருமுறை ஆயிரம் முனிவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்களிடம் வந்து ராவணின் மனைவியான மண்டோதரி செய்யும் தவத்தை ஏற்றுக்கொண்டதை புரிய வைக்க நெருப்பு பந்தாக வருவேன் என்று கூறுகிறார். பிறகு சிறு குழந்தையாக மாறி ராவணணின் அரண்மைனைக்கு செல்கிறார் சிவபெருமான். அழகான குழந்தையாக மாறி வந்த சிவபெருமானை ராவணண் தூக்குகிறார். இதனால் குழந்தைக்கு காயம் ஏற்படுகிறது. அதேசமயத்தில் கோவில் தீர்த்தத்திலிருந்து அக்னி பந்துக்கள் வருவதை பார்த்த ரிஷிகள் 999 பேர் அக்னியில் குதித்து விடுகின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் வேத புத்தகத்தை காப்பாற்ற வேண்டும் என்று குதிக்கவில்லை. இதனால் மனம் குளிர்ந்த சிவன் சகஸ்ர லிங்கமாக மாறிவிடுகிறார். வேத புத்தகத்தை காப்பாற்றிய அந்த ஒரு முனிவரே பிற்காலத்தில் மாணிக்கவாசராக பாராட்டப்படுபவர் ஆவார்.

இக்கோவிலின் வாசலிலே இரண்டு யாழிகள் இருக்கின்றது. கோவிலுக்கு வருபவர்கள் யாழியின் வாயில் உள்ள பந்துகளை கைகளால் நகர்த்தி விளையாடுவதுண்டு. இக்கோவில் மிகவும் பழமையான சிவன் கோவில் என்பதால், சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று நவகிரகங்களே அமைந்துள்ளது.

உத்திரகோசமங்கை ...
உத்திரகோசமங்கை ...

உத்திரகோசமங்கை என்பதற்கு பெயர் வர காரணம். இங்கே பார்வதி தேவிக்கு சிவபெருமான் வேதங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் இப்பெயர் பெற்றது. பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. பாண்டியன் உத்திரகோச மங்கையை தலைநகரமாக வைத்து ஆட்சி புரிந்தான்.

இக்கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள், திருக்கல்யாணம், சித்திரை, ஆதிரை திருநாள், தேர்விழா ஆகியனவாகும்.

இக்கோவிலில் உள்ள லிங்கம் தானாக தோன்றிய சுயம்புலிங்கம் என்று கூறப்படுகிறது. இவ்விடமே சிவனும் பார்வதியும் பிறந்த இடம் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள இலந்தை மரம் 3000 வருடங்கள் பழமையானது என்று சொல்லபடுகிறது. சிவனுக்கு தாழம்பூ இங்கு பயன்படுத்தப்படுகிறது. பிரம்மனுக்காக பொய் கூறிய தாழம்பூவை சிவபெருமான் தண்டித்திருப்பார் என்பதுதான் வரலாறு. ஆனால் இத்திருத்தலத்தில் தாழம்பூ சிவனுக்கு பயன் படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளது. ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்ட சகஸ்ரலிங்கம் ஆயிரம் முனிவர்களின் நினைவாக இங்கிருக்கிறது. மாணிக்கவாசகருக்கென்று தனி லிங்கம் அமைக்கப்பப்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மாவிலையிலிருக்கும் மகத்தான மருத்துவ குணங்கள்!
உத்திரகோச மங்கை சிவன் கோவில்

முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என்ற பெருமைக்காகவே இக்கோவிலுக்கு வந்து தரிசித்து விட்டுப் போகலாம். அதுமட்டுமில்லாமல், நிறைய அதிசயங்களையும், வியப்பையும் தன்னுள் வைத்திருக்கும் இக்கோவிலுக்கு வந்து தரிசித்து விட்டு போவது நல்ல அனுபவத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com