ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஆடிப்பெருக்கு...
ஆடிப்பெருக்கு...
Published on

பொதுவாகவே ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தில்  அதிகமான விசேஷ நாட்கள் உள்ளன. ஆடி வெள்ளி, ஆடி தபசு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடிப்பெருக்கு இப்படி எண்ணற்ற விசேஷ நாட்கள் ஆடி மாதத்தில் வருகின்றன.

ஆடி மாதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவது ஆடிப்பெருக்கு. இதனை பதினெட்டாம் பெருக்கு, புது புனல் வெள்ளம் என்றெல்லாம் அழைப்பர்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி பதினெட்டாம் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஆடிப்பெருக்கானது பொதுவாகவே நீருக்கு விழா (முக்கியமாக காவிரி) எடுக்கும் நாளாகவே போற்றப்படுகிறது.

சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பெரும்பாலும்  தண்ணீர் தட்டுப்பாடுகளும் இருக்க வாய்ப்புண்டு.

ஆடி மாதத்தில் வெப்பம் குறைந்து காற்று சாதகமாக வீசக்கூடிய சூழல் உருவாகும். அதனால்தான் ஆடி காத்தில் அம்மியும் நகரும் என்பர் முன்னோர்கள். காற்றோடு சேர்ந்து மழையும்  தொடங்கும் காலமாக  ஆடி மாதம் அமைவதால் இதனை துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் நாளாக கொண்டுகிறார்கள்.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது நீர். அந்த நீரின் வரத்து அதிகமாகி, மழை பெய்யத் தொடங்கி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  நீர்வரத்து தொடங்கி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.

வெயில் காலங்களில் வறண்டு போன நிலங்களில் மக்கள் மீண்டும் பயிரிட தொடங்குவர். எனவே ஆடிப்பெருக்கானது நீருக்கு விழா  எடுக்கும் நாளாகவும், விவசாயம் பெருகும் நாளாகவும்  பார்க்கப்படுகிறது. அதனால்தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்பர்.

மேலும் ஆடிப்பெருக்கு நாளில் அதிகாலையிலேயே நீர் நிலைகளில் நீராடி பூஜைகள் செய்து காவிரி தாயை வணங்கும்போது புது வெள்ளப்பெருக்கினால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கழிவுகள் போல, நம் வாழ்வில் உள்ள துன்பங்களும் அடித்துச் செல்லப்படும் என்பது  நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
சுட்டிப் பெண்ணின் அழகு ஓவியங்கள்! (ஓர் நேர்காணல்)
ஆடிப்பெருக்கு...

இந்நாளில் புதுமண தம்பதிகள் புதிதாக தாலி மாற்றிக்கொண்டு, பழைய தாலி மற்றும் தான் அணிந்த ஆடைகளை ஆற்று நேரில் விடுவது வழக்கம். அதோடு வருடம் திரும்பிய  புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வர்.

அன்றைய நாளில் சப்த கன்னிகளை வழிப்பட்டு மங்களகரமான ஆடைகளை அணிந்து வாழ்வில் எல்லா நலமும் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்வர். தொன்னை அல்லது வாழை மட்டைகளில் நெய் தீபமிட்டு அதனை ஆற்றில் மிதக்க விடுவர். 

திருமணம் ஆகாத பெண்களும் நல்ல கணவன் அமைய வேண்டும் என வேண்டிக்கொண்டு நூலினில் மஞ்சளை தடவி அதனை கைகளில் கட்டிக் கொள்வது வழக்கம். இவ்வாறு செய்யும்போது திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்  என்பதும், திருமணமான பெண்களுக்கு நீடித்த மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதும்  நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com