ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது எதற்காக தெரியுமா?

அம்மனுக்கு கூழ்...
அம்மனுக்கு கூழ்...
Published on

அம்மன் கோயில்களில் ஆடி மாதம் வந்து விட்டாலே திருவிழாக்கள் ஆரம்பித்துவிடும். ஆடிக்கூழ் ஊற்றுதல் என்பது, எளியவர்களின் பசிப்பிணியை போக்கி, அவர்தம் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற வழிபாட்டின் தாத்பரியம்.

ஆடி மாத வழிபாடு வேப்பிலைக்கும், எலுமிச்சைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புண்ணிய மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது நம்பிக்கை.

ஆடிக்கூழ் ஊற்றுவதன் கதையாக இதனை சொல்வர்:

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதைகேட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி துக்கம் தாங்காமல், தன் உயிரை விட முடிவு செய்து, தீயை மூட்டி அதில் இறங்கிவிட, அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து, தீயை அணைத்தான். இருந்த போதிலும் சில தீக்காயங்களால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதால், வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்துள்ளார் ரேணுகாதேவி.

பசியைப் போக்க அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்க, அங்குள்ள கிராம மக்கள் அவளுக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக தந்து ள்ளனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார்.

அவர் முன், சிவபெருமான் தோன்றி, 'உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்' என வரம் அளித்தார்.

இதையும் படியுங்கள்:
பிரவுன் மற்றும் வெள்ளை நிற அரிசியிலிருக்கும் 6 வகை வைட்டமின் சத்துக்கள்!
அம்மனுக்கு கூழ்...

இதனால்தான் இதனை நினைவு கூறும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆடி மாதம் வீசும் காற்றில் எங்கும் தூசி, கிருமிகள், நோய்கள் பரவும். இது போன்ற நோய்களை தவிர்க்க, கோயில்களில் ஆடி மாதம் முழுதும் கூழ் வார்த்தல், பொங்கல், மாவிளக்கு போட்டு, அம்மனை வழிபட்டு கொண்டாடி மகிழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com