பிரவுன் மற்றும் வெள்ளை நிற அரிசியிலிருக்கும் 6 வகை வைட்டமின் சத்துக்கள்!

பிரவுன் மற்றும் வெள்ளை நிற அரிசியிலிருக்கும் 6 வகை வைட்டமின் சத்துக்கள்!

நாம் உட்கொள்ளும் முக்கிய உணவாகிய அரிசியில் பல வகையான வைட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. பதப்படுத்தப்பட்ட வெள்ளை நிற அரிசியில் இருப்பதை விட பிரவுன் ரைஸில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதாகவும் ஒயிட் ரைஸில் மாவுச் சத்து அதிகம் எனவும் பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. இருப்பினும், இந்த இரண்டு வகை அரிசிகளிலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய 6 வகை வைட்டமின் சத்துக்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

1. வைட்டமின் K: இது எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படவும் கால்சியம் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவும். இதய ஆரோக்கியம் காக்கவும், மூளையின் அறிவாற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்யவும் உதவும். ஸ்ட்ரோக் வரும் அபாயத்தைத் தடுக்கவும், உடலில் காயம் ஏற்படும்போது இரத்தத்தை உறையச் செய்து இரத்த இழப்பைத் தடுக்கவும் செய்யும்.

2. வைட்டமின் E: இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சரும ஆரோக்கியம், நுரையீரல் இயக்கம் மற்றும் அறிவாற்றல் ஆகியவை மேன்மையடையவும், இதய நோய், புற்றுநோய் ஆகிய அபாயகரமான நோய்கள் வருவதைத் தடுக்கவும் இந்த வைட்டமின் உதவி புரியும்.

3. வைட்டமின் B2: இது மெட்டபாலிசம் சிறக்கவும், நரம்பு மண்டலம் சரிவர இயங்கவும், கல்லீரல், முடி, சருமம் மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேன்மையடையவும் உதவும். மைக்ரேன் தலைவலி குறையச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
உட்கார்ந்திருக்கும்போது கால் ஆட்டும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? போச்சு! 
பிரவுன் மற்றும் வெள்ளை நிற அரிசியிலிருக்கும் 6 வகை வைட்டமின் சத்துக்கள்!

4. வைட்டமின் B9 (Folate): இது பல வகையான கேன்சர் வரும் அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும்  வயதானவர்களுக்கு ஸ்ட்ரோக் மற்றும் டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோய் வருவதைக் குறைக்கவும்  உதவும்.

5. வைட்டமின் B3(Niacin): இது உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் உதவும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; சருமத்தின் செல்களை அழிவிலிருந்து பாதுகாக்கும். இதய நோய் வரும் அபாயத்தைக் குறைத்து இதயத்தைக் காக்கும்.

6. வைட்டமின் B1(Thiamine): இது மெட்டபாலிசம் சிறக்க உதவும். கார்போஹைட்ரேட்களை சக்தி தரும் குளுக்கோசாக மாற்ற உடலுக்குத் துணை புரியும். மேலும், செரிமானம் சிறக்கவும், தசைகள் வலுவடையவும், இதயம், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை சீராக இயங்கவும் வைட்டமின் B1 உதவி புரியும்.

வெள்ளையோ பிரௌனோ வேறுபாடு பார்க்காமல் அரிசி உணவை உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com