அக்னி நட்சத்திரம் நேரத்தில் சிவனுக்கு ஏன் தாராபிஷேகம் பண்ணுகிறார்கள் தெரியுமா?

தாராபிஷேகம்...
தாராபிஷேகம்...

க்னி நட்சத்திரம் நேரத்தில் எல்லா சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் நடைபெறும். அதிலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும். அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதியில் தாராபிஷேகம் தொடங்கப்படும். அனைத்து சிவன் கோவிலிலும் உள்ள மூலவருக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டி தொங்க விடுவார்கள். இந்த பாத்திரத்தில் பன்னீர், வெட்டிவேர், விளாமிச்சை வேர் பச்சிலை, ஜடா மஞ்சி, பன்னீர், பச்சை கற்பூரம் ஏலக்காய். ஜாதிக்காய். கடுக்காய். மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்த நீரை நிரப்புவார்கள் பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியே அருணாச்சலேஸ்வரர் லிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு சொட்டாக விழும்.

இந்த தாராபிஷேகம் அக்னி நட்சத்திரம் முடியும் நாளான மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அதேபோல் மற்ற சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுவிட்டது.

அக்னி நட்சத்திரத்தை ஒட்டி வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் தொடங்கிவிட்டது தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபிஷேகம் நடைபெறும். இதே போல் ஏராளமான கோவில்களில் அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவனுக்கு தாராபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவனுக்கு தாராபிஷேகம் செய்வதால் கோடையின் வெயிலின் உக்கிரகம் தணிந்து ஓரளவு இதமான சூழ்நிலை ஏற்பட மேகக் கூட்டங்கள் கூடி வரும் சிவபெருமானின் அருள் கிடைக்கும். அதனால் நமக்கு அக்னி நட்சத்திரத்தின் சூட்டின் வேகம் குறையும். முதல் வாரம் அக்னி நட்சத்திரத்தில் இருக்கும். சூட்டின் வேகம் செல்ல செல்ல படிப்படியாக குறைந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். பல நூறு ஆண்டுகளாக இந்த தாராபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகின்றன. அதிலும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஏனென்றால் அது அக்னி தலம் அல்லவா!

இதையும் படியுங்கள்:
தேங்காய்ப்பூவின் ஆரோக்கிய மகத்துவம்!
தாராபிஷேகம்...

கோடையில் தாக்கம் குறைந்து போதிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை சில தலங்களில் தோஷ நிவர்த்தியாகவும், இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மே 28 தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் தாராபிஷேகம் நடைபெறும் கோவிலில் தாராபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருளை பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com