ஏழுமலையான் குறித்து (8) எட்டு சுவாரஸ்யத் தகவல்கள்!

ஏழுமலையான்...
ஏழுமலையான்...

1) வேங்கடப் பெருமாளுக்கு சாத்தப்படும் பூ, அபிஷேகப்பால், நெய், மோர், தயிர், துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்திலிருந்து பிரத்தியேகமாகக் கொண்டுவரப்படுகிறது. அந்தக் கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது. இது திருப்பதியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவரை பொதுமக்கள் யாரையும் அனுமதித்ததில்லை. கோயில் அர்ச்சகர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

2. பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. அதாவது, பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியும் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த கந்தர்வ பேரரசு நீலாதேவி கவனித்துவிட்டு, தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு, அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி உள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பெருமாள், அதை அவர் தலையில் சூடிக்கொண்டு உள்ளார். அதனால்தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியைத் தானமாகப் பெருமாளுக்குக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

3. பெருமாளுக்குச் சார்த்தப்பட்ட மலர்களை மறுநாள் காலை சுத்தம் செய்தபின் அவற்றை அர்ச்சகர்கள் கர்பகுடி அல்லது கருவறை கூடையில் போடுவதில்லை. மாறாக கோயில் பின்பக்கத்தில் அமைந்துள்ள அருவியில் கொட்டுகின்றனர் அப்படிக் கொட்டும் பூக்களை ஒருபோதும் அவர்கள் அங்கு பார்த்ததில்லை. அவை அனைத்தும் கோயிலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எர்பேடு என்ற கிராமத்திற்குச் சென்று தேங்கி நிற்கின்றனவாம்.

பெருமாளுக்கு சாத்தப்படும் பூ..
பெருமாளுக்கு சாத்தப்படும் பூ..

4. திருப்பதி ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வப் பாறைகள் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே விதமானவை. எந்தக் கருங்கல் சிலை ஆனாலும் எங்காவது ஓரிடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோக சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்தக் கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போட்டது போல் இருக்கின்றன.

5. ஏழுமலையான் திருவுருவச் சிலைக்குப் பச்சைக் கற்பூரம் சாற்றுகிறார்கள். இந்தப் பச்சைக்கற்பூரம் ஒரு ரசாயனம். அரிப்பை கொடுக்கும்  ஒரு வகை அமிலம். இந்த ரசாயனத்தைச் சாதாரணக் கருங்கலில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள். ஆனால், வெடிப்பு எதுவும் ஏற்படுவதில்லை.

6. பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாக திகழ்கிறது. இந்த ஆடைக்கு மேல் சாத்து வஸ்தரமென்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம். இருந்தாலும் அதிகாலை 4.30 மணிக்கு பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில் ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பத்திலேயே இருக்கும். இது ஓர் அதிசயம்.

இதையும் படியுங்கள்:
விமான ஓட்டிகளாக மிளிரும் இந்தியத் தாரகைகள்!
ஏழுமலையான்...

7. ஏழுமலையானின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரிசில் இருந்து வாசனை திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும்.

8. ஏழுமலையான் சாற்றி இருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடைகொண்டது. இதை மூன்று அர்ச்சகர்கள் சேர்ந்துதான் சாற்ற முடியும். சூரிய சடாரியின் எடை அஞ்சு கிலோ, ஒற்றைக்கல் நீலம் மட்டும் ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதுபோன்ற நீலக்கல் வேறு எங்கும் கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com