ராமபிரான் வழிபட்ட மரகதலிங்கம்!

ஸ்ரீ மரகத சிவலிங்க சோமேஸ்வர சுவாமி கோயில்
ஸ்ரீ மரகத சிவலிங்க சோமேஸ்வர சுவாமி கோயில்

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்கு  உலகம் முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்த லிங்கம் காணப்படுவதைப் பார்க்கலாம். சிவலிங்கமானது பாதரச லிங்கம், ஸ்படிக லிங்கம், வைடூரிய லிங்கம் சுவர்ண லிங்கம் என பல வடிவங்களில் வழிபடப்படுகிறது.  அப்படிப்பட்ட விலை உயர்ந்த ரத்தினங்களில் ஒன்றான மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் சில கோயில்களில் உள்ளன. அடர் பச்சை நிறத்தில் ஜொலிக்கும் அரியவகை மரகதலிங்கம் காணப்படும் சண்டிப்பா க்ஷேத்திரம் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது..

பழமையான சண்டிப்பா ஸ்ரீ மரகத சிவலிங்க சோமேஸ்வர சுவாமி கோயில் தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் சங்கரபள்ளி மண்டலத்தின் சண்டிப்பா கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மேற்கத்திய சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்ரமாதித்தனின் ஆட்சியின்போது கட்டப்பட்டதாக கோயில் வளாகத்தில் உள்ள  கல்வெட்டில் எழுதியுள்ளதை மொழிபெயர்த்த போது தெரியவந்தது.

இங்குள்ள கல்வெட்டு 11 ஆம் நூற்றாண்டின் மேற்கு சாளுக்கிய மன்னர்களின் பெருமை மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றிக்  கூறுகிறது. மேலும், கோயிலுக்குச் சொந்தமான 254 ஏக்கர் நிலத்தை பராமரிப்பது பற்றியும், கோயிலின் பாதுகாப்பு பற்றியும் கல்வெட்டில் குறிப்படப்பட்டள்ளது.  காலபைரவ சுவாமி மற்றும் ஒரு தெய்வீக பாம்பு தான் இந்த பழமையான  கோயிலை பாதுகாக்கிறது என்றும் கூறப்படுகிறது.

நாட்கள் செல்லச் செல்ல மக்கள் கோயிலைப் புறக்கணிக்கத் தொடங்கினர்.  பண்டிகைகள் தவிர மற்ற சாதாரண நாட்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறவில்லை. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த அனைத்து கோயில் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டன.

2007 ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று, சிறந்த சிவ பக்தரான நரேஷ்குமார் என்பவர் சண்டிப்பா கிராமத்திற்கு பூஜை செய்யவும், இறைவனை வழிபடவும் சென்றார்.  கோயிலுக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. கோயில் கட்டிடம் சிதிலமடைந்து கிடந்தது. மேலும், கோயில் பகுதிக்கு அருகில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தன, கோயில் பகுதியில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன,.  பக்தர் நரேஷ்குமார்  சிவலிங்கத்தை சுத்தம் செய்து அபிஷேகம் செய்யத் தொடங்கினார். அப்போதுதான் சூரியக் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுவதைக் கண்டார்,, சூரிய ஒளியின் பிரதிபலிப்பு அது சாதாரண சிவலிங்கம் அல்ல என்பதைக் காட்டியது. 

அந்த சிவலிங்கம் அபூர்வ மரகத சிவலிங்கம் என்பதைக் கண்ட பக்தர் நரேஷ்குமார்  ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சண்டிப்பா ஸ்ரீ மரகத சிவலிங்க சோமேஸ்வர சுவாமி கோவிலுக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சென்று பூஜை மற்றும் அபிஷேகம் செய்தார். முறையற்ற சாலைகள், கடுமையான வானிலை மற்றும் பல தடைகள் வந்த போதிலும் பூஜை செய்வதை தொடர்ந்தார்.

பத்திரிகை நிருபராக இருந்த நரேஷ்குமார் செய்தித்தாளில் சண்டிப்பா மரகத சிவலிங்கம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

ரீ மரகத சிவலிங்க சோமேஸ்வர சுவாமி
ரீ மரகத சிவலிங்க சோமேஸ்வர சுவாமி

இதன் மூலமாக  கோயிலைப் பற்றி அறிந்த சில பக்தர்கள் அதை புனரமைக்க முன் வந்தனர். அதன்பிறகு, பல பிரபலங்கள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து உதவிகள் செய்தனர். சண்டிப்பா கிராம மக்களும் சில உதவிகளை வழங்கினர்.

இதையடுத்து, 2012-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கணபதி,  சுப்பிரமணிய சுவாமி, ராஜராஜேஸ்வரி தேவி, நந்தீஸ்வரர் ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த மரகத சோமேஸ்வர லிங்காபிஷேக நீரை சாப்பிட்டால், நோய்கள் குணமாகி அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஐந்து திங்கள், ஐந்து பௌர்ணமிகள், ஐந்து சிவராத்திரிகள் ஆகியவற்றில் மரகத லிங்கத்தை வழிபட்டால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்., பிரம்ம முகூர்த்தத்தில் அபிஷேகம் செய்தால் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

இக்கோயிலின் அதிபதி காலபைரவர். கோயில் வளாகத்தில் ஜொலிக்கும் காலபைரவர் ஆயிரம் கண்களால் வளாகத்தைக் காப்பதாக ஐதீகம், ஞாயிற்றுக்கிழமைகளில்  காலபைரவரை வணங்குவது அனைத்து தீய சக்திகளையும் அகற்றுமாம். மேலும், சுப்பிரமணியசுவாமி இங்கு நாக வடிவில் வலம் வருவதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நகைச்சுவையும் கற்றுக்கொடுக்கும்..!
ஸ்ரீ மரகத சிவலிங்க சோமேஸ்வர சுவாமி கோயில்

நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்குரிய மரகதக் கல்லாலான சிவலிங்கத்தை வழிபட நாம் வேண்டும் வரம் கிடைக்குமென புராணங்கள் கூறுகின்றன. மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதனை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும்.அதேபோல லிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சந்தனத்தை இட்டுக் கொள்வதால் மருத்துவ பலன்கள் கிடைக்குமென கூறப்படூகிறது.

மரகத லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, மற்றும் பெரிய பதவியை ,பெறக்கூடிய யோகத்தைப் பெறலாம். நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நினைத்த உயரத்தை அடையவும் முடியும்.. அத்துடன் நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

தெலுங்கானா மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். தற்போதும் கோயிலுக்கு செல்லும் பாதை குறுகலாகத்தான் இருக்கிறது. பாதைகளை விரிவுபடுத்தவும் வருகை தரும் பக்தர்களுக்கு மேலும் வசதிகள் செய்து தரும் முயற்சிகளில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com