பஞ்ச நரசிம்ம திருத்தலங்கள்!

Pancha narasimhar stalangal
Pancha narasimhar stalangal
deepam strip
deepam strip

பஞ்ச நரசிம்மர் என்பவர்கள் ஐந்து வெவ்வேறு நரசிம்ம வடிவங்கள். உக்கிர நரசிம்மர், வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், யோக நரசிம்மர், மற்றும் லட்சுமி நரசிம்மர். திருவெண்காடு மற்றும் சீர்காழிக்கு அருகில் உள்ள ஐந்து வெவ்வேறு கோயில்களில் இந்த ஐந்து வடிவங்களும் அமைந்துள்ளன. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. 1: திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர்

Thirukurayalur
Thirukurayalur

சீர்காழியில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது‌ பஞ்ச நரசிம்ம தலத்தில் முதலாவதாவது. மூலவர் உக்கிர நரசிம்மர் சீதேவி பூதேவியுடன் காட்சி தரும் இத்தலத்தின் தாயார் அம்ருதவல்லித் தாயார். திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊர். அமாவாசை சுவாதி தினங்களில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்றபடி நெய்தீபம் ஏற்றி 7 அல்லது 9 வாரங்கள் வழிபட தோஷம் விலகும். பஞ்ச பூதங்களில் நெருப்பின் உருவாக நரசிம்மர் காட்சி அருளிய தலம்.

2. 2: மங்கைமடம் வீர நரசிம்மர்

Mangai madam narasimhar
Mangai madam narasimhar

மன்னராக இருந்து திருமங்கை ஆழ்வார் எனப் போற்றப்பட்டவர் பிறந்த தலம். சீர்காழியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. ஹிரண்யாசுரனுக்கு வரம் அளித்த தோஷத்துக்கு ஆளான சிவபெருமான், யமன் இவர்களுக்காக, நாராயணன் நரசிம்மராய் காட்சி தந்த தலம். இக்கோவில் மூலவர் வீர நரசிம்மன். சாளிகிராம கல்லால் ஆன திருமேனி.

உத்சவர் ரங்கநாதர், தாயார் செங்கமலவல்லித் தாயார். மன்னராக இருந்த போது தான் விரும்பிய பெண்ணை மண முடிப்பதற்காக ஆழ்வார் இந்த வீர நரசிம்மரை வணங்கி அன்னதானம் செய்தார். பஞ்சபூதத்தில் காற்றுத் தலம் இது. நரசிம்ம ஜெயந்தி போது 1008 கலச பூஜையும், திருவீதி உலாவும் நடைபெறும். பிரிந்த தம்பதி சேரவும், அரசியலில் வெற்றி பெறவும் இவரை வழிபட, இனிதே நடைபெறும்.

3. 3,4: திருநகரி யோக நரசிம்மர் & ஹிரண்ய நரசிம்மர்

Thiru nagari yoga narasimhar and hiranya narasimhar
Thiru nagari yoga narasimhar and hiranya narasimhar

மங்கை மடத்திலிருந்து 2 கிமீ தொலைவில், யோக நரசிம்மரையும், ஹிரண்ய நரசிம்மரையும் வழிபடலாம். இந்த இரண்டு நரசிம்மரும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சிறப்பு பெற்ற தலம். ஹிரண்ய நரசிம்மரை தரிசித்தால் எதிரி தொல்லைகள் அகலும். யோக நரசிம்மரை தரிசித்தால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இந்த இரண்டு தலங்களும் பூமித்தலமாகும். திருமணத்தடை நீங்க இங்கு 3 சனிக்கிழமைகள் வழிபட தடைநீங்கும்.

இதையும் படியுங்கள்:
ராகு தோஷத் தடைகள்: 18 பரிகாரத் தலங்களின் அரிய ரகசியங்கள்!
Pancha narasimhar stalangal

4. 5. திருவாலி லக்ஷ்மி நரசிம்மர்

Thiruvali Lakshmi narasimhar
Thiruvali Lakshmi narasimhar

ஹிரண்ய சிசுவை வதம் செய்த பிறகு நரசிம்மர் கோபம் தணிக்குமாறு தேவர்கள் லக்ஷ்மியை வேண்ட, லக்ஷ்மி, நரசிம்மரின் வலது பக்கம் அமர, அவர் கோபம் தணிந்தது‌. லக்ஷ்மி நரசிம்மர் அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய நரசிம்மராவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com