விக்னம் தீர்க்கும் விநாயகர் வழிபாடு!

விநாயகர்...
விநாயகர்...
Published on

-ம. வசந்தி

விநாயகரை கும்பிட்டால் விக்கினம் தீரும் என்பது நம்பிக்கை . விக்னம் என்றால் இடையூறு என்று பொருள். இந்த விநாயக வழிபாடு என்பது முக்கியமான ஒன்று. எந்த காரியத்தை தொடங்கும்போதும் பிள்ளையாரை வழிபட்டு தான் தொடங்குகிறோம். தொடங்க வேண்டும் என்பது நமது இந்து மத சம்பிரதாயம் . ஆனால் பிள்ளையாரை வணங்குவதற்கு முன்னால் பிள்ளையாருக்கு பூஜை செய்ய தொடங்கும் முன் ஒரு பிள்ளையார் பூஜை செய்தே தொடங்க வேண்டும். கோவிலில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்கிறோம். அப்படி அந்த பூஜையை செய்யும்போது முதலாவதாக மஞ்சள் அல்லது பசுஞ்சாணம் அல்லது அச்சு வெல்லம் (சர்க்கரை) இவற்றில் எது கிடைக்கிறதோ அதை கொண்டு ஒரு பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல்லை செருகி பிள்ளையாரை நினைத்து அதை வழிபட வேண்டும் இதையே விக்னேஸ்வர பூஜை என்று சொல்லுவார்கள்.

நாம் ஒரு காரியத்தை தொடங்கும்போது அந்த காரியம் எந்த தடையும் இன்றி நன்கு நடைபெற வேண்டும் என்று நினைத்து வழிபட்டுகிறோம். பிள்ளையாருக்கு விக்னகர்த்தா (விக்னங்களை உண்டாக்குபவர்) விக்னேஸ்வரன் (விக்னங்களை நீக்குபவர்) என்ற பெயரும் உண்டு. தன்னை வழிபடாது காரியங்களை செய்ய முற்பட்டால் அந்த காரியங்களை செய்ய முடியாமல் தடைகளை உண்டாக்குவார் பிள்ளையார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. 

முருகப்பெருமான் வள்ளியை மணம் முடிக்க சென்ற கதை நமக்கு எல்லோருக்கும் தெரியும். நாரத முனிவர் வேலனிடம் வந்து கனி கொண்டு வந்தேன் என்று சொல்ல கனியான கன்னியை மணமுடிக்கும் அவசரத்தில் தன் அண்ணனை கவனிக்காது அவரை வணங்காது சென்றுவிட, பின்னால் அவர் வள்ளியை மணமுடிக்கும் முயற்சியில் வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக பல உருவங்கள் எடுத்து முயற்சி நிறைவேறாமல், அயர்ந்து நிற்கும் வேளையில் நாதர் மூலமாக தன் அண்ணன் விநாயகர் பெருமானை வணங்காது வந்ததால்தான் தடைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து விநாயகரை வணங்க வினை தீர்க்கும் விநாயகர் யானை உருவெடுத்து வந்து வள்ளியையும் முருகனையும் சேர்த்து வைத்த கதையிலிருந்து ஒவ்வொரு கடவுளும் விநாயகரை வணங்க மறந்தபோதெல்லாம் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை நமது புராணங்கள் சொல்கின்றன.

இதையும் படியுங்கள்:
பெண், பெண்ணால்..!
விநாயகர்...

விநாயகரை திருப்திபடுத்த ஒரு அச்சுவெல்லம், ஒரு கை பொரி, ஒரு பிடி அவல் இவை மட்டுமே போதும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விநாயகரை வழிபாடு செய்யும் போது தலையில் குட்டி சுக்லாம் பரதம் சொல்லி கும்பிட்டால் போதும் நமக்கு அருள்புரிய நம்மைத் தேடி ஓடோடி வந்து விடுவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com