மரணத்திற்குப் பின் ஆன்மா எங்கே போகிறது? கருட புராணம் கூறும் திடுக்கிடும் உண்மைகள்!

Life after death - கருட புராணம்
Life after death - கருட புராணம்Ai Image
Updated on

ருட புராணம் என்பது இந்து சமயத்தில் உள்ள 18 மகா புராணங்களில் ஒன்றாகும். இது விஷ்ணு பகவான் தனது வாகனம் ஆன கருடனுக்கு எடுத்துரைத்த ஆன்மீக உரையாடல் ஆகும்.

கருடன் கேள்விகள் கேட்க விஷ்ணு பகவான் பதில் சொல்வதுதான் கருட புராணத்தின் சிறப்பு.

இது மரணத்திற்கு பிந்திய ஆன்மாவின் பயணம் மறுபிறவி நரக வேதனைகள் ஈமச்சடங்குகளின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

இந்து மத நம்பிக்கைகள்படி மனிதர்களின் வாழ்வியலையும் இறப்புக்கு பிந்திய நிலையும் விளக்குகிறது. இதில் பூர்வ காண்டம் பிரேத காண்டம் என இரு பிரிவாக உள்ளது.

முதல் பகுதியில் அறநெறிகள் தான தர்மங்கள் நீதி பிறப்பு இறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில் மரணத்திற்குப் பிறகு ஆத்மா செல்லும் வழி பாவம் புண்ணியங்களுக்கும் ஏற்ப தண்டனைகள் மறுபிறவி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தைத் தாண்டி ஆயுர்வேதம் மருத்துவம் தந்திர கலைகள் ஜோதிடம் நவரத்தினம் அதன் பலன்கள் போன்ற தகவல்கள் அடங்கி உள்ளது.

மனிதன் தன் வாழ்நாளில் முக்தி அடையவேண்டும் என்பதை வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும். விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்ற அமைந்துள்ளது. மொத்தம் 19 ஆயிரம் செய்யுள்கள் உள்ளது. இந்த புராணம் பூர்வ கந்த உத்தரகந்த என இரண்டு பிரிவாக உள்ளது. மனிதப் பிறவியில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இந்த கருட புராணத்தில் இடம்பெற்றுள்ளது.

மனித வாழ்வில் இன்ப துன்பங்களையும் வாழ்வியல் ரகசியங்களையும் எடுத்துரைக்கிறது. அந்நியன் படம் வெளியான பிறகு கருட புராணம் கும்பி பாகம், கிருமி போஜனம் போன்ற வார்த்தைகள் பழக்கமானதாக ஆகிவிட்டது. அணுவாக இருந்தாலும் அண்டமாக அனைத்திலும் நிரம்பி பரம்பொருள் உருவாக்கப்பட்டு உயிரினங்கள் தேவர்கள் முன் இருக்கக்கூடிய பிறப்பு இறப்பு பற்றி கூறப்படுகிறது.

Life after death - கருட புராணம்
Life after death - கருட புராணம்AI Image

இந்த புராணத்தில் ஒவ்வொரு கிரகத்தின் நிறம் மற்றும் அதன் தூரம் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மனித பிறவி என்பது இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான். மனித வாழ்வில் ரகசியங்களை எடுத்துரைக்கிறது. கருட புராணத்தை படிப்பது மூலமாகவோ அல்லது கேட்பது மூலமாகவோ நாம் எப்படி வாழவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

உலகத்தில் மொத்தம் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளன. இவற்றில் யோனி பேதங்கள் உண்டு. இதன்படி மனித பிறவியே சிறந்த பிறவி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அண்டஜம், உற்பிஜம், ஜெராயுஜம், சுவேதஜம், என நான்கு பிரிவுகள் உள்ளன.

அண்டஜம்

முட்டையிலிருந்து வெளிவரும் இனங்களை குறிக்கிறது.

உற்பிஜம்

பூமியிலிருந்து தோன்றிய மரம் செடி கொடிகள் புல் பூண்டு போன்ற தாவரங்களை குறிக்கிறது.

ஜெராயுஜம்

கருப்பையில் இருந்து தோன்றும் மனிதப் பறவி மற்றும் விலங்குகள் என 21 லட்சம் வகைகளை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அரபிக்கடலின் அலையடிக்கும் கரையில் ஒரு அதிசய விநாயகர்: கணபதிபுலே கோவில் ரகசியங்கள்!
Life after death - கருட புராணம்

சுவேதஜம்

வேர்வை தண்ணீர் போன்றவற்றில் தோன்றும் கொசுக்கள் புழுக்கள் என 21 லட்சம் வகைகளை குறிப்பிடப் பட்டுள்ளது.

இவையெல்லாம்வற்றிலும் மானிடப் பிறவியை சிறந்தது என முத்தாய்ப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த கருட புராணத்தில்.

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், மனித பிறவியின் உன்னத நோக்கத்தையும், அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் நம் ஆன்மாவின் பயணத்தை எப்படி தீர்மானிக்கிறது என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். வாழ்நாoffsetிலேயே நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு, மரண பயத்தை வென்று, முக்தி அடைவதற்கான உன்னத வாழ்வியல் நெறியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com