தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

Araikasu Amman
Araikasu Amman TempleImage Credits: Youtube
Published on

ந்தக் கோவிலில் உள்ள அம்மனை வணங்கினால், நாம் தொலைத்த பொருள், செல்வம், மகிழ்ச்சி அனைத்தையும் மீட்டுத் தருவார் என்றால் நம்ப முடிகிறதா? அத்தகைய சிறப்புமிக்க கோவிலை பற்றித்தான் இன்று இந்த பதிவில் காண உள்ளோம்.

புதுக்கோட்டையில் திருகோகர்ணம் என்ற ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் கோகர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் பிரகதாம்பாள் ஆகும். கோவிலின் வாசலில் பிள்ளையார் சன்னதியும், தக்ஷிணாமூர்த்தி சன்னதி அடுத்தடுத்தே அமைந்துள்ளது. ஜூரம் வந்து வேண்டினால் போக்கக் கூடிய ஜூரஹரேஸ்வரர் சன்னதி, சரஸ்வதி, லக்ஷ்மி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வாணை, பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளது. மன்னர் காலத்தில் தினந்தோறும் இந்த அம்மனுக்கு திருவிழா நடக்குமாம். தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுகிறது.

புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வமாக இருந்தவள் ஸ்ரீ பிரகதாம்பாள். புதுக்கோட்டையை ஆண்ட ராஜாக்கள் அம்மனின் உருவத்தை காசுகளில் பதிவு செய்து வைத்திருப்பார்களாம். அவ்வாறு பதிவு செய்த காசு அரை வட்ட வடிவத்தை கொண்டதாக இருக்கும். இதனால்தான் பிரகதாம்பாளை அரைக்காசு அம்மன் என்று அழைக்கிறார்கள்.

அரைக்காசு அம்மன்...
அரைக்காசு அம்மன்...

ஒருமுறை சமஸ்தானத்தில் பாரம்பரிய நகை ஒன்று காணாமல் போனது. பதறிப்போனவர்கள் அம்மனிடம் வந்து முறையிட உடனே கிடைத்ததாம். மகிழ்ந்த மன்னர் குடும்பத்தினர் விஷேச பூஜைகள் செய்தனர். இந்த தகவல் வெளியில் பரவ விஷேச சக்தி படைத்தவளாக அம்பிகை கொண்டாடப்படுகிறாள். அம்பிகையை நினைத்து வெல்லம், நெய் வைத்தியம் செய்தால் அது கரைவது போல நம் வேதனை கரையும் என்பது நம்பிக்கை. எழுமிச்சை மாலை அணிவித்தால் தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். அன்றிலிருந்து இன்று வரை அரைகாசு அம்மன் தொலைந்த பொருட்களை தேடித்தரும் அம்மானாக மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

மூலவர் திருகோவர்ணேஸ்வரருக்கும் ஒரு வரலாறு உண்டு. தேவர்களின் பசுவான காமதேனு சாபம் பெற்று பூமியில் பசுவாகவே பிறந்தது. சாபம் நீங்க மகிழமரம் நிறைந்த இந்த காட்டில் இருக்கும் திருதலத்திற்கு தினம்தோறும் காதுகளில் கங்கை நீரை சேமித்துக் கொண்டு வந்து அபிஷேகங்கள் செய்து சாப விமோஷனம் பெற்றது. அப்போது மீதமிருந்த நீரை கொம்புகளால் கீரி ஏற்பட்ட பள்ளத்தில் சேமித்ததாகவும் வரலாறு உண்டு. இந்த பள்ளத்தில் சேமித்த நீர்தான் இன்று கபில தீர்த்தம் என்று கோவிலில் இருக்கும் நீராகும்.

இதையும் படியுங்கள்:
பருவநிலை மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வது எப்படி?
Araikasu Amman

இங்கு பாறைகள் குடையப்பட்டு மண்டம் அமைக்கப் பட்டிருக்கிறது. இங்குள்ள மாடிப்பகுதியில் முருகன் வள்ளி, தெய்வாணையோடு எழுந்தருளியிருக்கிறார். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது சிறப்பு. மகிழமரம் இதன் தலவிருட்சமாக உள்ளது. எனவே ஏதேனும் பொருளை தொலைத்து விட்டு வெகுகாலமாக கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டீர்களானால் கட்டாயம் இந்த அரைக்காசு அம்மனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com