சகல தோஷங்களையும் நீக்கும் அம்மன்குடி கைலாசநாதர்!

அம்மன்குடி கைலாசநாதர் கோயில்...
அம்மன்குடி கைலாசநாதர் கோயில்...

ம் ஜாதகத்தில் ஏற்படும் ஒவ்வொரு தோஷங்களுக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கு செல்வது வழக்கம் ஆனால் வேறு எங்கும் செல்ல வேண்டாம் சகலதோஷங்களையும் நிவர்த்தி செய்யும் ஒரு ஆலயத்தை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? கும்பகோணம் அருகே அம்மன்குடி என்ற ஊரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் ஆலயம் தான் அது. அந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். 

நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு. துர்கா பரமேஸ்வரி எட்டு கரங்களுடன், சிம்மவாகனத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். 

கல்விக் கடவுளான சரஸ்வதி வீணையுடன் அருள்பாலிப்பது வழக்கம். இங்குள்ள யோக சரஸ்வதி வீணையின்றி யோக நிலையில் இருக்கிறாள். இவளை வழிபட்டால் மனம் ஒருமுகப்படும். இதன் மூலம் கல்வியில் மேன்மை உண்டாகும். இவ்வாண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உள்ளவர்கள், இந்த சரஸ்வதியை வழிபட்டு வந்தால், அவர்களுக்கு படிப்பில் கவனமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும். 

இதையும் படியுங்கள்:
மணத்தக்காளி கீரையில் இத்தனை மகத்துவமா?
அம்மன்குடி கைலாசநாதர் கோயில்...

மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், அன்னை துர்க்கைக்கு தோஷம் ஏற்பட்டது. இதனைப் போக்க, அவள் சிவனை எண்ணி தவமிருந்தாள். பூலோகத்திலுள்ள  தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஸ்தாபித்து தியானம் செய்தாள். 12 ஆண்டுகள் தவம் தொடர்ந்தது. தவத்தினால் மகிழ்ச்சியடைந்த சிவன் அம்பாள் முன்தோன்றி, உன்தோஷம் நீங்கி விட்டது. இத்தலத்திலேயே தங்கி, உன்னை தரிசிப்பவர்களின் சகல தோஷங்களையும் நீக்கி, அவர்கள் வேண்டும் செயல்களுக்கு வெற்றியை அருள்வாயாக, என்று வரமளித்தார். தேவி தவம் செய்த இடம் தேவி தபோவனம் எனப்பட்டது. இங்குள்ள தீர்த்தம் அம்மனின் பாவத்தைப் போக்கியதால் பாவ விமோசன தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது.

துர்க்காதேவி
துர்க்காதேவி

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது. இங்கு பார்வதி, துர்கை, வள்ளி தெய்வானையுடன் முருகன், தபஸ் மரகத விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், யோக சரஸ்வதி, பிரம்மா, விஷ்ணு போன்ற தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.

கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில் வழியாக வடகரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரம் சென்றால் அம்மன்குடியை அடையலாம். கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் உள்ள திருநீலக்குடியிலிருந்து 5 கி.மீ. தூரம் பயணித்தாலும் இத்தலத்தை அடைந்துவிடலாம். ஆடுதுறை - நன்னிலம் வழியில் 8 கி.மீ. தூரம் சென்றாலும் இத்தலம் வந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com