மணத்தக்காளி கீரையில் இத்தனை மகத்துவமா?

மணத்தக்காளி கீரையில் இத்தனை மகத்துவமா?

ணத்தக்காளி கீரை மூலிகை வகையை சேர்ந்தது. இது உணவாகவும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். மணத்தக்காளி இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்த வகை டானிக்காக இதன்கீரையும், பழங்களும் பயன்படுகின்றன. உடல் கழிவுகள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களை குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

சில சமயம் மனம் அமைதி இன்றி படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் எரிச்சல் உண்டாகும். அத்தகைய நேரத்தில் மணத்தக்காளி கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனதுக்கும் மகிழ்ச்சி உண்டாகும். மணத்தக்காளி கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்தும். சிறுநீர் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் உதவும்.

இக்கீரை சிறிது கசப்புச் சுவையுடையது. சமைத்து சாப்பிடும்போது கசப்பு குறைவாய் இருக்கும். மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்ததாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னையில் சிக்கித் தவிப்பவர்கள் இப்பழத்தைச் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

மணத்தக்காளி கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். ஒரு கைப்பிடி அளவு கீரையை சாறாக மாற்றி பிடித்த பழரச பானத்துடன் சேர்த்து அருந்தினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்! 
மணத்தக்காளி கீரையில் இத்தனை மகத்துவமா?

இக்கீரையை உண்ண, உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். நிம்மதியான தூக்கம் வரும். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு, கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும், கல்லீரல் கோளாறுகளையும் குணமாக்க பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல்களையும் இந்தக் கீரை தணிப்பதாகும்.

உலர்ந்த மணத்தக்காளி கீரை அல்லது கீரைப் பொடி ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கொதிக்க வைத்து, உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வியர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com