
எல்லா கடவுள்களும் வண்ண வண்ணமாக உடை உடுத்தி இருக்கிறார்கள். ஆனால் கலைவாணி… ஆம்… சரஸ்வதி (Goddess Saraswati) மட்டுமே வெள்ளை நிறத்தில் ஜொலிக்கிறாள். வெள்ளை ஆடை மட்டும் அல்ல. தான் வீற்றிருக்கும் தாமரையும் வெள்ளை தான். இரண்டு கைகளில் வீணையை வாசிக்கிறார். ஒரு கையில் ஜப மாலை. மற்றும் ஒரு கையில் ஓலைச்சுவடி. அது வேதமாக இருக்கலாம். அவர் வாகனம் அன்னம். அதுவும் வெள்ளை.
சரஸ்வதிக்கு கலைமகள் என்று ஒரு பெயரும் உண்டு.
சரி.
நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.
மனிதன் சுத்தமாக, தூய்மையாக இருப்பது கட்டாயம் அவசியம். அதை சொல்லவே சரஸ்வதி வெள்ளை ஆடையில் இருக்கிறார்.
இது மட்டுமே அல்ல.
ஒரு மனிதன் தன் எண்ணம், சொல் மற்றும் செயலில் உண்மையாக தூய்மையில் இருக்க வேண்டும் என்று சரஸ்வதியின் உடை நமக்கு உணர்த்துகிறது.
எண்ணம்
சொல்
செயல்
இந்த மூன்றும் தூய்மையாக வைத்தால் அந்த மனிதன் சரஸ்வதி அருளை பெறுவான்.
சரஸ்வதி கடாட்சம் இல்லாமல் இருந்தால் லஷ்மி கடாட்சம் கிடைக்கவே கிடைக்காது.
சரி.
நாம் நவராத்திரியில் சரஸ்வதி பூஜை செய்து வழிபடுகிறோம்.
அன்று தான் ஆயுத பூஜை கூட.
ஏன் சரஸ்வதி பூஜை அன்று ஆயுத பூஜையையும் கொண்டாடுகிறோம்…?
எந்த ஆயுதமும் சிந்தனை இன்றி உருவாக்க முடியாது.
மனிதன் தன் மூளையின் மூலம் கருவிகளை படைக்கிறான். இது பரிபூர்ண சரஸ்வதி கடாட்சம்.
ஆம்.
அறிவே சரஸ்வதி கடாட்சம்.
சரஸ்வதி பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.
சிருங்கேரியில் பாரதி என்ற அவதாரம் எடுத்தார். அவர் கணவர் ஒரு தத்துவ ஞானி.
அவருடன் போட்டிப் போட வேறு ஒரு சன்யாசி தயார் ஆனார்.
அவர் பாரதி கணவரை விவாதத்திற்கு அழைத்தார்.
விவாதத்தில் தான் வென்றால் பாரதி கணவர் சன்யாசி ஆகி விட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இருவரும் காரசாரமாக விவாதித்தார்கள். கடைசியில் பாரதி கணவர் தோற்று விடுகிறார். பாரதி கணவர் சன்யாசி ஆக தயார் ஆனார்.
அப்போது, "அந்த கர்வம் நிறைந்த சன்யாசியிடம் தத்துவ விவாதம் செய்ய நான் தயார்" என்று பாரதி சொன்னார்.
ஒரு பெண்ணுடன் விவாதம் செய்ய தயங்கினார் சன்யாசி. இதை புரிந்து கொண்ட பாரதி அவரிடம், "நான் வெற்றி பெற்றால் நீங்கள் சன்யாசத்தை கைவிட வேண்டும்," என்றார். அவர் இறுதியில் ஒப்புக் கொண்டார்.
விவாதம் ஆரம்பித்தது. தனது கணவரின் மெய்யான ஞானம் உலகுக்கு சொல்லவே சரஸ்வதி விவாதம் துவங்கினார்.
விவாதம் சூடு பிடித்தது. சன்யாசியால் சமாளிக்க முடியாமல் போனது. அதிர்ச்சி அடைந்தார். கடைசியில் சன்யாசி தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
பாரதியின் அவதார நோக்கம் நிறைவேறியதால் அவர் கோயிலின் உள்ளே சென்று மாயமானாள்.
ஆம்.
அவள் தான் சிருங்கேரி சாராத தேவி.
நாம் கட்டாயம் சரஸ்வதியை வழிப்பட வேண்டும்.
வழிபாடு எப்படி செய்வது…?
முன்பே சொன்னது போல்
எண்ணம்
சொல்
செயல்
எல்லாம் தூய்மையாக, உண்மையாக இருக்க வேண்டும்.
இப்படி செய்தால்…
நமக்கு பரிபூர்ண சரஸ்வதி கடாட்சம் கிடைக்கும்.
இது சத்தியம்.