குரு பகவானின் நேரடி பார்வை பெறணுமா? இந்த கோவிலுக்கு போனா 'குபேர யோகம்' நிச்சயம்!

குரு தோஷ நிவாரணத்திற்கான முக்கிய ஸ்தலங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக ஒழுக்கங்கள் குறித்து விரிவான விளக்கம்
Guru Parihara Temples
Guru Parihara Temples
deepam
deepam

குருப் பெயர்ச்சி நாளில் அருகில் உள்ள கோவில்களில் அல்லது தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு தலங்கள் பற்றி பார்ப்போம்.

1. 1. அயப்பாக்கம்

ayapakkam
ayapakkam

சென்னையில் அயப்பாக்கம் வடகுரு ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தியாக குருபகவானின் இயல்பு படி இவர் கல்வி, செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்களின் அனுபவம்.

2. 2. குச்சனூர்

kuchanoor
kuchanoorcredit facebook

தேனி மாவட்டம் குச்சனூரில் குரு பகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள் புரிகிறார். இந்த ராஜ யோக தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சியளிக்கிறார். சாந்தம் பொங்கும் திருமுகம் கொண்டவர். இவரை வழிபட்டால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3. 3. தக்கோலம்

thakkolam
thakkolamcredit dinamani

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இங்கு தட்சிணாமூர்த்தி வலது காலை தரையில் ஊன்றி இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலது கை சின் முத்திரை காட்ட வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தி உள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின் கையில் ஞானதீபம், தலையை சற்றே வலது புறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

4. 4. தென்குடித்திட்டை

thenkudi thittai
thenkudi thittaicredit alaya thuligal

தஞ்சாவூர் திருக்கருக்காவூர் வழியில் தென்குடி திட்டை என்ற ஊர் உள்ளது இங்கு நின்ற நிலையில் தட்சிணாமூர்த்தி ராஜ குருவாக அருள் பாலிக்கும் தலம். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் இவர் கொலு வீற்றிருக்கிறார். சிவனின் அருளும் ,அம்பிகையின் அருளும் ஒருங்கே இணைந்து அளிக்கும் ஈடில்லா மூர்த்தியாக இங்கு திகழ்கிறார்.

5. 5. திருவொற்றியூர்

Thiruvottiyur Vadivudai Amman Temple
Thiruvottiyur Vadivudai Amman Templecredit maalaimalar

சென்னை - திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்தி தனி கோவில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பது போல இங்கு அமைந்துள்ளது.

6. 6. ஆலங்குடி

alangudi
alangudicredit oneindia tamil

கும்பகோணம் மன்னார்குடி சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆலங்குடி. இங்கு தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே உள்ளது. அனைத்து ஆலயங்களிலும் இருக்கும் . ஆனால் ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை சிறந்த வேலைபாடுகளுடன் தரிசிக்கலாம். திருத்தேரில் பவனி வரும் மூர்த்தி இவர். இங்கு ஆறு காலஅபிஷேகம் உண்டு.

7. 7. இலம்பை பயங்காட்டூர்

Ilambai Bayan Kattur Guru Bhagavan Temple
Ilambai Bayan Kattur Guru Bhagavan Templecredit alaya thuligal

காஞ்சிபுரம் பேரம்பாக்கத்தின் அருகில் உள்ள தலம் இலம்பையங்கோட்டூர். இங்குள்ள உள்ள தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் சின் முத்திரையை இதயத்திற்கு மேலே வைத்தபடி தன் பார்வையை கீழ் நோக்கிய படியும் ஞான குருவாக இருக்கிறார் . இங்கு வந்து வழிபடுபவருக்கு மறுபிறவி இல்லை என்கிறார் திருஞானசம்பந்தர்.

8. 8. பூந்தோட்டம்

poonthottam
poonthottamcredit alaya thuligal

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் உள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழி பட்டால் முயற்சி வெற்றி தரும். இங்கு தட்சிணாமூர்த்தி இருக்கும் பீடத்தில் அடியில் 12 ராசிகளும் அதன் மீது நந்தி பகவான் உள்ளனர். சனகாதி முனிவர்களுக்கு பதிலாக அகத்தியர், கோரக்கர் உள்ளனர். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. ஒரு குருபரிகாரத்தலமான இங்கு வந்து வழிபடுவோருக்கு குருவருளும், திருவருளும் கிடைக்கும்.

9. 9. பாடி - திருவலிதாயம்

Validaya Nath Temple
Validaya Nath Templecredit astro ulagam

சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ளது வலிதாய நாதர் கோவில். இது குருபகவான் வழிபட்ட தலமாகும் . வியாழபகவான் தான் செய்த தவறால் தன் தமையன் மனைவியின் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவிய நாடினார். அவரது ஆலோசனைப்படி இத்தல காட்சி தந்த சிவன் விமோசனம் கொடுத்தார். குருவுக்கு இங்கு சன்னதியில் உள்ளது. இவர் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

இதையும் படியுங்கள்:
கள்ளபிரான் கோவில் பால்பாண்டி பெருமாள்: பெயர் காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Guru Parihara Temples

10. 10. திருச்செந்தூர்

tiruchendur
tiruchendurcredit alaya thuligal

குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதானமாக இடம் பெறுவது முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவினான திருச்செந்தூர் ஆகும். தேவர்களை அழிக்க என்று முருகப்பெருமான் வந்த பொழுது தேவர்கள் குருவான பிரதஸ்பதி அசுரர்களைப் பற்றியும் அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால் இத்தலம் குரு தலமாக கருதப்படுகிறது.

இங்கு மேதா தட்சிணாமூர்த்தியின் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள் குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாக சென்று வர வேண்டிய தலம் இது. இன்னும் அருகில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி நாளில் சென்று பரிகாரம் செய்து அருள் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com