கள்ளபிரான் கோவில் பால்பாண்டி பெருமாள்: பெயர் காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும் ஒரு விநாடி தரிசனம்! தரிசித்தால் மறுபிறவி கிடையாது?
Kallapiran temple Sreevaikuntam
Kallapiran temple SreevaikuntamImage credit: myadhyatm
Updated on
Deepam strip
Deepam strip

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது கள்ளபிரான் கோவில். நவதிருப்பதிகளில் முதன்மையானது. நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரிய ஸ்தலமாக விளங்குகிறது.

மூலவர் வைகுண்டநாதன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் கள்ளபிரான் என அழைக்கப்படுகிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.

திருநெல்வேலி திருச்செந்தூர் செல்லும் சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில். தாயார் பெயர் ஸ்ரீ வைகுண்ட வல்லி. சித்திரை திருவிழா மார்கழி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கட்டபொம்மன் பயன்படுத்திய கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது. பிரம்மன் தன் கமண்டல நீரைக் கொண்டு பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதால் இங்குள்ள தீர்த்தம் கலச தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

கோமுகசுரன் என்ற அரக்கனை அழித்து இங்கு வைகுண்ட நாதர் ஆக வீற்றிருக்கிறார். மற்ற பெருமாள் கோவில்களில் ஆதிசேஷன் மடியில் பெருமாள் அமர்ந்த நிலையில் இருப்பார் ஆனால் இந்த கோவிலில் பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் விண்ணுலகில் தாங்கி நிற்கும் ஒரே இடம் ஸ்ரீவைகுண்டம் ஆகும்.

மணவாள மாமுனிகள் இங்கு எழுந்து அருளி இருக்கிறார். அந்தக் காலத்தில் அரண்மனையைச் சேர்ந்த பசுக்கள் மேய்வதற்காக ஒரு சிறுவன் அந்த பசுக்களை அழைத்துச் செல்வது வழக்கம். அதில் ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்து வந்தது. இதனைக் கண்ட அந்த சிறுவன் பாண்டிய மன்னரிடத்தில் கூற, பாண்டிய மன்னர் அந்த இடத்திற்கு வந்து தோண்டி பார்க்கும்போது அங்கு பெருமாள் இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு கோவில் கட்டினார்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகத்தில் எழும் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்!
Kallapiran temple Sreevaikuntam

கள்ளபிரான் திருமேனியை உருவாக்கிய சிற்பி அதன் அழகில் மயங்கி கள்ளபிரானின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார். இன்றும் பெருமாள் கன்னத்தில் சிற்பி கிள்ளிய தடம் காணப்படுகிறது.

1801 இல் கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு இடையே ஏற்பட்ட போரில் கட்டபொம்மன் இந்த கோவிலை தனது கோட்டையாக பயன்படுத்தினார்.

இந்த கோவிலில் நவகிரகங்களுக்கு பதிலாக சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வது விசேஷம்.

ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சூரிய ஒளி பெருமாள் மீது படும் படி அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும். தை முதல் நாள்கள்ள பிரானுக்கு 108 போர்வைகளை போர்த்தி கொடி மரத்தை சுற்றி வந்த பின்னர் பூஜை செய்து ஒவ்வொரு போர்வையாக கலைப்பார்கள் இந்த நேரத்தில் 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாளுக்கும் கள்ளபிரான் காட்சி தரவதாக ஐதீகம். இங்குள்ள சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

108 திவ்ய தேசங்களில் இந்த கோவில் 91 வது திவ்ய தேசமாக விளங்கி வருகிறது. பிரம்மதேவனின் படைப்பு சுவடி அடங்கிய வேத சாஸ்திரங்களை கோமுகன் என்ற அசுரன் திருடி சென்றான்.

இதனால் படைப்பு தொழில் தடைபட்டது. பிரம்மதேவன் திருமாலிடம் வேண்டிக் கொண்டபடி பெருமாள் கோமுகனை அழித்து வேத சாஸ்திரங்கள் அடங்கிய படைப்புசுவடியை மீட்டிகொடுத்தார். இந்த ஸ்தலத்தில் தான் வைகுண்டநாதர் அவதரித்தார்.

இங்குள்ள வைகுண்ட நாதருக்கு பால்பாண்டி என்ற பட்டப் பெயரும் உண்டு. பாண்டிய மன்னன் தினசரி பெருமாளுக்கு அபிஷேகத்திற்கு பால் வழங்கியதால் பால்பாண்டி என பெயர் வந்தது. பக்தர்கள் தங்களுக்கு மோட்சம் கிடைக்க இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று கள்ளபிரான் அர்த்த மண்டபத்தில் அழைத்துக் கொண்டு செல்வார்கள் அப்போது நடை அடைக்கப்பட்டு இருக்கும், கண் இமைக்கும் நேரத்தில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு தீப ஆராதனை காட்டப்படும் மீண்டும் நடை அடைக்கப்படும். இந்த நிகழ்ச்சியை கண்டவர்களுக்கு பிறவா நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவில் 110 அடி உயரம் உள்ளது ஒன்பது நிலைகளை கொண்ட ராஜகோபுரம் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'சொர்க்கப் பிரதட்சணம்' என்றால் என்ன? உங்களை வியப்பில் ஆழ்த்தும் அரிய ஆன்மீக உண்மைகள்!
Kallapiran temple Sreevaikuntam

கருவறையில் ஆதிசேஷன் குடை பிடிக்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவருக்கும் உற்சவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் நரசிம்மர் கோதண்ட ராமர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. வைகாசி மாதம் கருட சேவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டு நன்மை பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com