ஸ்ரீ சத்யநாராயணா பூஜையின் சிறப்புகள்!

Sri Satyanarayana Pooja
Anmiga katturaiImage credit - youtube.com
Published on

பௌர்ணமி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கிரிவலமும்  சத்யநாராயணா பூஜையும்தான். இதில் சத்தியநாராயணா பூஜை பற்றி தெரிந்து கொள்வோம்.

 கலியுகத்தில்  ஸத்ய நாராயண பூஜை ஒன்றே சகல செளபாக்யத்தையும் தர வல்லது. ஸத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் பிரதோஷ வேளையில் முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.

இந்த பூஜையை புரோகிதர் வைத்து செய்வது கை மேல் பலன் கிடைக்கும். வசதியற்றவர்கள் குரு உபதேசம் பெற்று ஒரு ஸ்தய நாராயண புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். இந்த பூஜையை பௌர்ணமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் உள்ள நாளில் செய்யலாம்.

ஸ்ரீஸத்ய நாராயண பூஜையை செய்பவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும்.

ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தபோது வாழ்வில் பல வழிகளிலும் காமம், க்ரோதம் போன்ற துன்பத்தின் பிடியில் இருந்த மக்களை சந்தித்தார். இவர்களின் துன்பத்தை போக்கும் வழி என்ன என்று ஸ்ரீமஹா விஷ்ணுவிடம் கேட்டதற்கு ஸ்ரீ சத்யநாராயணா விரதம் பலனை அளிக்கக்கூடியது என்றார்.

பூஜை முறைகள் 

ஸ்ரீஸத்ய நாராயண பூஜை செய்வதற்கு முன்னதாக பெளர்ணமியன்று வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு அதன்மீது மூன்று வாழை இலைகளை வைத்து   அரிசியை பரப்ப வேண்டும். வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலினால் சுற்றி அரிசியின் மேல் வைக்கவேண்டும்.

ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீரை கலசத்தில் நிரப்பி உள்ளே மாவிலைகளை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு இடவேண்டும்.

இதையும் படியுங்கள்:
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உருவான வரலாறு தெரியுமா?
Sri Satyanarayana Pooja

மஞ்சள் பொடியை தண்ணீரை தேங்காயின் மீது தூவி, இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவித்து மாலை சாத்த வேண்டும். பிறகு ஸ்ரீஸத்ய நாராயணர் படத்தை பூக்களால் அலங்கரித்து, தொண்ணையிலான 9 கிண்ணங்களில் நவ தானியங்கள் நிரப்பி, நவக்கிரகங்களுக்காக பூஜை செய்யும்இடத்தில் வைக்க வேண்டும்.

சூரியனுக்கு சிவப்பு, சந்திரனுக்கு வெள்ளை, செவ்வாய்க்கு சிவப்பு, புதனுக்கு பச்சை, குருவுக்கு மஞ்சள், சுக்ரனுக்கு வெள்ளை, சனிக்கு கருப்பு, ராகுவுக்கு நீலம் கேதுவுக்கு பலவண்ண நிறங்களில் வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு அரிசி, செவ்வாய்க்கு துவரை, புதனுக்கு பச்சைப்பயறு, குருவுக்கு கடலை, சுக்ரனுக்கு மொச்சை, சனிக்கு எள், ராகுவுக்கு உளுந்து, கேதுவுக்கு கொள்ளு ஆகியவற்றை படைக்க வேண்டும்.

முதலில் விநாயகர் பூஜை, சங்கல்பம் நவக்கிரக பூஜை அஷ்ட திக் பாலக் பூஜை செய்து, அதன் பிறகு கலச பூஜை வருண பூஜை பின் சத்யநாராயண பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்ரீசத்யநாராயண அஷ்டோத்திர சத்நாமாவளியை உச்சரிக்க வேண்டும்.

ஸ்ரீசூக்தம் நாராயண சூக்தம், பிரம்ம சூக்தம், துர்கா சூக்தம், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், பாக்யா சூக்தம், நாராயண உபநிஷத் விஷ்ணு சஹஸ்ரநாமம் ருத்ரம் சமகம் சொல்வது மேலும் அளவில்லாத பலனை தரும்.

பின்னர் தூபம், தீபம், நிவேதனம், கற்பூரதீபம் முதலிய வற்றை காட்டி கதை படித்து பூஜையை நிறைவு செய்யவேண்டும். கண்டிப்பாக பிரசாதம் சாப்பிட வேண்டும். பூஜை முடிந்ததும்   தான, தர்மங்கள் செய்வது இன்னும் அதிக பலனை கொடுக்கும்

முக்கியமான விஷயம், இந்த விரதத்தை மேற்கொள் பவர்கள் எவ்வளவு தடங்கல் வந்தாலும் இடைவிடாது செய்தல் வேண்டும்

முயற்சி செய்து ஸ்ரீ சத்யநாராயணா பூஜை செய்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com