3.8 பில்லியன் (380 கோடி) ஆண்டுகள் பழமையான பாறை... இமயமலையை விட மூத்ததா திருச்சி மலைக்கோட்டை?

சோழர், பல்லவர், விஜயநகரப் பேரரசு, ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்களை திருச்சி மலைக்கோட்டை கண்டுள்ளது.
திருச்சி மலைக்கோட்டை விநாயகர்
Trichy malaikottai rock temple
Updated on
Deepam strip
Deepam strip

திருச்சி மலைக்கோட்டை காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மற்றும் கோவில் வளாகம் ஆகும். இது சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. 272 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், மதுரை நாயக்கர் பல்லவர் கால கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வழங்குகிறது.

இது திருச்சி நகரத்தின் பிரபல அடையாளமாக உள்ளது. மலையில் பாதியில் அமைந்துள்ள பகுதி சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குகை கோவில் ஆகும். பாறையை செதுக்கி 473 படிகள் அமைத்து அதன் வழியாக உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லலாம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் திருச்சி காவிரி ஆறு, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் அழகை கண்டு ரசிக்கலாம்

இமயமலையை விட பழமையான பாறை அமைப்புகளை கொண்டது இந்த மலைக்கோட்டை. திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல்லவர், சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசர், ஆங்கிலேயர்கள் ஆகியோர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்களை கண்டுள்ளது இந்த கோட்டை.

இதையும் படியுங்கள்:
மலைக்கோட்டை பிள்ளையார்: அறியப்படாத ரகசியங்கள்! கோயிலுக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?
திருச்சி மலைக்கோட்டை விநாயகர்

நடுவில் ஒரு மலையும் அதைச் சுற்றி கோட்டையும் அமைந்துள்ளது. எனவே இது மலைக்கோட்டை என அழைக்கப்படுகிறது. இதில் பல்லவர் கால குடைவரை கோவிலில் நாயக்கர் கால கோட்டையும் அமைந்துள்ளது சிறப்பானதாகும். கர்நாடகப் போரில் இந்த மலைக்கோட்டை சிறப்பு இடம் பெற்றுள்ளது. நாயக்கர் காலத்தில் இந்த கோவிலை சுற்றி குளமும் மற்றும் முக்கிய சுவர்களையும் கட்டியுள்ளார்கள். தற்போது இந்த கோட்டை இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

உச்சிபிள்ளையார் கோவிலில் நூறு கால் மண்டபம் உள்ளது. இந்த கோட்டை வரலாறு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சின்னமாக விளங்கி வருகிறது. ஆற்காடு நவாப்பும், ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையில் போர் புரிந்து வந்தனர். ராபர்ட் கிளைவ் இந்த கோட்டையை மையப்படுத்தி போர் புரிந்து வந்தார்.

இந்த கோட்டையில் மாணிக்க விநாயகர் கோவில் மலையின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. தாயுமானவர் என்று சிவன் கோவில் மலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது குடை வரை கோவிலாகும். உச்சிப்பிள்ளையார் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. உச்சிப்பிள்ளையார் கோவில் ராமாயணத்தோடு தொடர்பு கொண்டது. விபீஷணன் என்பவரிடமிருந்து ஸ்ரீ ரங்கநாதர் சிலையை மறைக்க விநாயகர் பாறையாக மாறிய இடம் என வரலாறு கூறுகிறது.

திருஞானசம்பந்தர் மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்கு பல்லவர் கால குடைவரை கோவில், நாயக்கர் கால கோட்டை என இரு பிரிவாக உள்ளது

மேலே உள்ள சன்னதியை அடைய 437 படிகள் ஏற வேண்டும். திருச்சி நகர மையத்தில் சுமார் 83 மீட்டர் உயரமான மலையாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
யாரும் நம்ப முடியாத தமிழர்களின் கட்டிடக்கலை! மலை உச்சியை குடைந்து கட்டப்பட்ட கோவில்!
திருச்சி மலைக்கோட்டை விநாயகர்

நாயக்கர் பல்லவர் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்த மலைக்கோட்டை.

logo
Kalki Online
kalkionline.com