ஹோமங்களும் அவற்றின் பலன்களும்!

ஹோமங்களும் அவற்றின் பலன்களும்!
Updated on

கணபதி ஹோமம்: காரியத் தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த காரியங்கள் வெற்றி உண்டாகும்.

சண்டி ஹோமம்: பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

நவகிரஹ ஹோமம்: கிரஹ தோஷங்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

சுதர்ஸன ஹோமம்: ஏவல், பில்லி சூனியங்கள் நீங்கும். சகல காரியங்களிலும் வெற்றி ஏற்படும்.

ருத்ர ஹோமம்: ஆயுள் விருத்தி உண்டாகும்.

மிருத்யுஞ்ச ஹோமம்: மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

புத்திர கமேஷ்டி ஹோமம்: நீண்ட நாட்களாக வேண்டும் புத்திர பாக்கியம் உண்டாக்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம்: பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்.

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்: ஆண்களுக்கு உண்டான திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் கல்யாணம் நடைபெறும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்: செல்வ வளம் பெருகும், பொருளாதார நெருக்கடி நீங்கி பணப்புழக்கம் ஏற்படும்.

தில ஹோமம்: சனி தோஷம் போக்கும், இறந்த முன்னோர்களின் சாபங்களை விலக்கும்.

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்: நீண்ட நாட்களாக வருத்தி வந்த நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லை அடியோடு நீங்கும்.

ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம்: எதிரிகளின் சூழ்ச்சிகள், தொல்லைகள் அனைத்தும் நீங்கி, உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

கண் திருஷ்டி ஹோமம்: திருஷ்டி தோஷங்கள் விலகும். செய்தொழில், மற்றும் காரியத் தடைகள் நீங்கும்.

கால சர்ப்ப ஹோமம்: திருமணத் தடை, உத்தியோகத் தடை போன்றவை நீங்கும். வாழ்வில் உண்டான சோதனைகள் நீங்கி, சாதனைகள் மலரும்.

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்: சகல பயங்களும் விலகும். சத்ருக்களிடம் வெற்றி பெற வைக்கும்.

ஜோதிட ரீதியாக ஏற்பட்டுள்ள கிரக நிலைகளை நன்கு ஆராய்ந்து அதற்குரிய ஹோமங்களை முறையாகச் செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com