
கோவிலுக்கு சென்று இறைவனை வழிப்படுவது மட்டுமில்லாமல் கோவிலை சுற்றி வரும் பழக்கத்தையும் பலகாலமாக நாம் கடைப்பிடிக்கிறோம். இவ்வாறு கோவிலை சுற்றி வருவதுதான் இறை வழிப்பாட்டில் மிகவும் எளிமையானது என்று சொல்லப்படுகிறது.
கோவிலை சுற்றி வருவதின் மூலமாக நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவம் அழியும் என்று நம்பப்படுகிறது. இறை வழிப்பாட்டோடு இணைந்திருக்கும் கோவிலை சுற்றி வருவது, தோப்புக்கரணம் போடுவது போன்றவை நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நம் முன்னோர்கள் பூமியில் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடத்தில் தான் கோவிலை அமைத்தார்கள். கோவிலின் மையப்பகுதியில் கர்ப்பக்கிரகம் அமைந்திருக்கும். இதை சுற்றிவரும்போது நல்ல நேர்மறை ஆற்றல் நமக்கு கிடைக்கும்.
கோவிலை சுற்றி வரும்போது 3, 5,7,9 என்ற எண்ணிக்கையில் வலம் வரவேண்டும். கோவிலை சுற்றும் போது அவசரமாக செய்யாமல் நிதானமாகவும், பொறுமையாகவும் சுற்றிவருவது இறைவனை அடைவதற்கு சிறந்த வழியாகும்.
கோவிலை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் தெரியுமா? இறைவனை அடையவேண்டும் என்று எண்ணுபவர்கள் கோவிலை ஒருமுறை வலம் வரலாம். மனக்கவலை தீரவேண்டும் என்றால், கோவிலை மூன்று முறை வலம் வரவேண்டும். இஷ்டசித்திக்கு ஐந்து முறை வலம் வரவேண்டும். நினைத்த காரியம் நடக்க ஏழுமுறை சுற்றி வர வேண்டும். எதிரிகள் அழிய ஒன்பது முறை சுற்ற வேண்டும்.
ஆயுள் விருத்திக்கு பதினோறு முறை சுற்ற வேண்டும். வேண்டுதல்கள் நிறைவேற பதிமூன்று முறை வலம்வர வேண்டும். தனவரவு ஏற்பட பதினைந்து முறை சுற்ற வேண்டும். தானிய வரவு ஏற்பட பதினேழு முறை சுற்ற வேண்டும். ரோகம் நிவர்த்தியாக பத்தொன்பது முறை சுற்றி வரவேண்டும். கல்வியில் சிறக்க இருபத்தியோரு முறை சுற்றி வரவேண்டும்.
சுகபோக வாழ்வு கிடைக்க இருபத்திமூன்று முறை சுற்ற வேண்டும். 108 முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும். 208 முறை வலம் வந்தால் யாகம் பெற்ற பலன் கிடைக்கும். நீங்கள் கோவிலுக்கு செல்லும்போது எத்தனை முறை கோவிலை சுற்றி வலம் வருவீர்கள் என்பதை கருத்தில் தெரிவியுங்கள்.