கர்பலா தியாகம் முதல் கத்தி போடும் திருவிழா வரை: மொகரம் மாதத்தின் முழு உண்மைகள்!

Muharram month - மொகரம் மாதம்
Muharram month - மொகரம் மாதம்AI Image
Updated on

மொகரம் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின்படி முதல் மாதமாகும். இது இஸ்லாமிய புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கிறது. இது ரமலானுக்கு அடுத்தபடியாக மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்று குறிப்பாக ஷீயா மற்றும் சன்னி பிரிவினர் இந்த மாதம் முக்கியமாக கொண்டாடுகிறார்கள்.

மொகரம் மாதத்தில் பத்தாவது நாள் ஆஷி ரா என அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில்தான் முகமது நபியின் பேரன் உசைன் அலி கர்சலா போரில் தியாக மரணம் அடைந்தார்.

இந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஷியா பிரிவை சேரந்த முஸ்லிம்கள் துக்க நாளாக அனுசரித்து கருப்பு ஆடைகள் அணிந்து வீதிகளில் ஊர்வலமாக சென்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

சன்னி முஸ்லிம்கள் ஆசிரா நாளை மூஸா நபி எகிப்து மன்னன் போரோவிடமிருந்து வெற்றி பெற்ற நாளாக கொண்டாடுகிறார்கள். ஆஷுரா தினத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பான நோன்புகளை மேற்கொள்கிறார்கள். இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று.

இஸ்லாமிய நாட்காட்டி படி மாதங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

மொகரம்

சபர்

ரபீஉல் அவ்வல்

ரபி உல் ஆகிர்

ஜமா அத்துல் அவ்வல்

ஜமா அத்துல் ஆஹிர்

ரஜப்

ஷபான்

ரமலான்

ஷவ்வால்

துல் கதா

துல்ஹஜ், என அழைக்கப்படுகிறது.

குறிப்பாக சொல்வதென்றால், தென்னிந்திய முஸ்லிம்கள் இதனை துக்க நாளாகவும் வட இந்திய முஸ்லிம்கள் இதனை வெற்றி விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமில் ஷியா மற்றும் சன்னி பிரிவு என இரண்டு வகை உள்ளது. ஷியா பிரிவை சார்ந்தவர்கள் துக்க நாளாகவும் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் வெற்றி விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.

Muharram month - மொகரம் மாதம்
Muharram month - மொகரம் மாதம்AI Image

இந்த புனித மாதத்தில் சண்டைகள் புனித போர் ஆகிவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் நோன்பு இருந்தால் வாழ்வு வளமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நாளில் 9 மற்றும் பத்தாம் நாளில் நோன்பு இருக்கிறார்கள். சிலர் இந்த நாளில் ஆசுரா என்ற கத்தியால் தங்களை தாங்களே அடித்து காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

மொகரம் பண்டிகை சந்திரன் பார்க்கும் தேதியை வைத்து கொண்டாடப்படுகிறது. முகமது நபி இந்த மாதத்தை அல்லாஹ்வின் புனித மாதம் என்று அழைத்தார். இந்த நாளில் நோன்பு இருப்பதை வழக்கமாக ஆக்கியவர்கள் முதன் முதலில் யூதர்கள் எனப்படுகிறது. இயேசு பிறப்பதற்கு முன்பே ஆசிரா நோன்பு தொடங்கிவிட்டது.

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே மொகரம் மாதம் எவ்வாறு மாறுபட்டு அனுசரிக்கப்படுகிறது?

கிபி 680 ஆம் ஆண்டில் கர்பலா என்ற இடத்தில் முகமது நபியின் பேரன் உசைன் அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக தங்கள் உயிரை தியாகம் செய்தனர். எனவே சன்னி முஸ்லிம்கள் இதனை வெற்றி திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி, ஸ்ரீரங்கத்தில் கூட இல்லாத ரகசியம்! மன்னார்கோவில் வேதநாராயணர் கோயிலின் அற்புதம்!
Muharram month - மொகரம் மாதம்

மொகரம் என்றால் அரபு மொழியில் தடை செய்யப்பட்ட என்ற பொருள்படும். ஜாதி மதம் எல்லைகளை தாண்டி மனிதநேயம் தியாகம் மற்றும் நேர்மையாக போராடியதை நினைவு கூறும் ஆன்மீக நிகழ்வாக இந்த மாதம் உலகம் முழுவதும் முஸ்லிம் மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. வட இந்திய முஸ்லிம்கள் இந்த நாளில் தங்கள் உடம்பில் கத்தி வாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி வருத்தி கொள்ளுகிறார்கள்.

இதை மாரடி ஊர்வலம் என்றும் கத்தி போடும் திருவிழா என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவில் தென்னிந்திய முஸ்லிம்கள் மொகரத்தை துக்க நாளாகவும், வட இந்திய முஸ்லிம்கள் இதனை மகிழ்ச்சி நாளாகவும் கொண்டாடி வருகிறார்கள். ஹைதராபாத் போன்ற நகரங்களில் இதனை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த கட்டுரையின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கலாச்சார வேறுபாடுகளையும், கர்பலா தியாகத்தின் வரலாற்றுப் பின்னணியையும் எவ்வித பாகுபாடுமின்றி நடுநிலையான வரலாற்றுப் பார்வையில் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com