கேட்டதையெல்லாம் தரும் கற்பக விநாயகர்!

Karpaga vinayagar gives everything asked like Karpaga tree!
Karpaga vinayagar gives everything asked like Karpaga tree!Image Credits: Maalaimalar
Published on

நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பக விநாயகரின் சிறப்புகளையும், மகிமைகளையும் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் இருப்பது தான் புகழ்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில். தேவலோகத்தில் இருக்கும் கற்பக மரத்தின் அடியில் நின்று நாம் என்ன வரம் வேண்டினாலும் அது கிடைக்கும். அதைப்போல தான் கற்பக விநாயகரிடம் நாம் மனதில் என்ன நினைத்து வேண்டினாலும் அது உடனேயே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் தான் இவருக்கு கற்பக விநாயகர் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோவில் 2500 வருட பழமையான குடைவரைக் கோவிலாகும்.

குன்றைக்குடைந்து கோவிலாகவும், ஸ்ரீ கற்பக விநாயகரின் சிற்பத்தையும், ஸ்ரீ திருவீசர் என்ற லிங்கத்தையும் பாண்டியர்கள் வடிவமைத்துள்ளனர்.

இங்குள்ள கற்பக விநாயகருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. விநாயகர் கையிலே தனக்கு பிடித்த மோதகம் இல்லை. அதற்கு பதிலாக யோகநிலையில் உலக நன்மைக்காக கையிலே லிங்கத்தை வைத்து ஞான தவம் புரியும் யோக விநாயகராக இருப்பதால், இவரிடம் கேட்ட வரங்களெல்லாம் எளிதிலே கிடைத்துவிடும். வடக்கு திசையை நோக்கியிருக்கும் வலம்புரி விநாயகரே பிள்ளையார்பட்டி விநாயகர். வலம்புரி விநாயகரை வணங்குபவருக்கு வாழ்வில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

விநாயகர் ஆவணி மாதம் வளர்பிறை சதூர்த்தி திதியில் அவதரித்தார். அதனால் தான் ஆவணி மாதம் வருகின்ற வளர்பிறை சதூர்த்தி திதியை விநாயகர் சதூர்த்தியாக கொண்டாடுகின்றோம். இந்த 2024 ஆண்டு, சூரிய உதயத்தோடு வருகிற சதூர்த்தி திதியான செப்டம்பர் 7ஆம் தேதியை தான் விநாயகர் சதூர்த்தியாக கொண்டாட வேண்டும்.

மாட்டு சாணம், களிமண், மஞ்சள், சந்தனம் இதில் ஒன்றை பிள்ளையாராக பிடித்து வைத்து இரண்டு அருகம்புல்லை வைத்தாலே போதும் நம் குறைகளை கேட்க ஓடோடி வரும் எளிமையான கடவுள் தான் பிள்ளையார்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பெருமாளின் சங்கு சக்கரம் இருக்கும் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?
Karpaga vinayagar gives everything asked like Karpaga tree!

பிள்ளையாரை இந்து மதத்தில் மட்டும் கடவுளாக வழிப்படவில்லை. பௌத்த மதத்திலும் ‘விநாயகா’ என்ற பெயரில் வழிப்படப்படுகிறார். திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் விநாயகருக்கு எண்ணற்ற பக்தர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com