

இந்து சமயத்தில் கற்பக விருட்சம் என்பது மனிதர்களின் மனதில் நினைப்பதையும் கேட்பதையும் உடனே தரக்கூடிய தேவலோகத்து அதிசய மரமாகும். இந்த மரம் தேவலோகத்தில் அல்லது தேவேந்திரனின் நந்தவனத்தில் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. கற்பக விருட்சத்தின் கீழ் நின்றுகொண்டு நாம் எதை நினைக்கிறோமோ அதை நிச்சயமாக கிடைக்கும் என்பது ஐதீகம்
கற்பக விருட்சத்தின் உள்ளே ஸ்வர்ண வர்ஷினி தேவி வாசம் செய்கிறாள். இவர் மகாலட்சுமிக்கு நிகரானவர். செல்வம் மற்றும் வளங்களை அள்ளித்தருபவள். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அற்புதங்களில் இந்த கற்பக விருட்சகமும் ஒன்று. புரு தண்டி என்ற ரிஷிக்கு மகா கணபதி அருளி இந்த கற்பக விருட்சத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி உதவச் செய்தார் என்று ஆன்மீக கதைகள் கூறுகின்றன
ஆன்மீக அடிப்படையில் அத்திமரம் போன்ற சில மரங்கள் கலியுகத்தின் கற்பகவிருட்சம் எனப் போற்றப்படுகிறது. கற்பக விருட்சம் தேவலோகத்தில் காணப்படுகிறது. கற்பக வருஷத்தின் கீழ் நின்றுகொண்டு நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அது நமக்கு கை கூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
பாற்கடலில் தோன்றிய இந்த மரம் வேண்டிய வரங்களைத்தரும் தெய்வ அம்சம் கொண்டது. தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது பாற்கடலில் இருந்து 16 வகையான பொருட்கள் வெளிவந்தன. அதில் தோன்றிய வலம்புரிச் சங்கையும் மகாலட்சுமி தன் வசம் வைத்துக்கொண்டார். பாற்கடலில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திசைக்கு சென்றுவிட்டன.
இந்த பாற்கடலில் பச்சை நிற மரக்கிழைகள் போன்ற மரம் ஒன்று மிதந்து வந்தது. அந்த மரத்தின் நடுவில் மஹாலக்ஷ்மி பொற்காசுகளுடன் நின்று கொண்டு இருந்தாள் இதுதான் கற்பகவிருட்சம் மரம். அந்த தெய்வமே ஸ்வர்ண வர்ஷினி தேவி என அழைக்கப் படுகிறாள். அந்த மரமானது குபேர திசையில் வடக்கு திசை நோக்கி சென்றது. இதுவே கேட்டதை தரும் கற்பகவிருட்சம் மரம் ஆகும்.
காமதேனுவை தேவலோக பசு என்று சொல்கிறோம். அதேபோன்றுதான் இந்த மரத்தையும் கற்பகவிருட்சம் என்று அழைக்கிறார்கள். இரண்டுமே பாற்கடலில் தோன்றியதுதான். இந்த மரம் தேவேந்திரன் இருப்பிடத்தில் உள்ளது. அன்னபட்சி மறைந்துபோன பிறகு இந்த மரமும் அழிந்துவிட்டது.
விரும்புகின்ற செல்வங்களை தரும் காமதேனு போன்று கற்பக மரமும் இணையாக பூஜிக்கப்படுகிறது. காமதேனும் கற்பக விருட்சமும் பாற்கடலில் தோன்றியதாக இருந்தாலும் கற்பக விருட்சம் மரம் மட்டும் கணபதியின் அருளால் தோன்றியது. இந்த மரத்தின் பட்டைகள் இலைகள் வேர்கள் என அனைத்துமே மூலிகை பொருட்கள் ஆகும்.
தற்காலத்தில் பனை மரத்தையும் கற்பக விருட்சம் என அழைக்கிறார்கள். அதோடு அரச மரத்தையும் கற்பக மரத்திற்கு ஒப்பிடுகிறார்கள். பனைமரத்தை பூலோக கர்ப்பக விருட்சம் என அழைக்கிறார்கள். கற்பக விருட்சம் எல்லாம் அனைத்து செல்வங்களையும் அளிக்கக்கூடியது.
திருப்புவனம் கோவிலில் பங்குனி உற்சவத்தில் இரண்டாம் நாள் சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நான்காம் நாளில் சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.
திருப்பதி பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் சுவாமி மலையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது மூன்றாம் நாள் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.
காமதேனு கற்பகவிருட்சம் இரண்டுமே தேவலோகத்தில்தான் உள்ளது. இந்த இடத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகிறது.