நதியின் மடியில் அமர்ந்திருக்கும் கட்டில் துர்கா பரமேஸ்வரி அம்மனின் அதிசய வரலாறு!

Durga Parameshwari Miracle - துர்கா பரமேஸ்வரி
Durga Parameshwari Miracle - துர்கா பரமேஸ்வரிAI Image
Updated on

ரு கோவில் கருவறை எப்போதும் ஈரமாகவே இருக்கும் அதிசயம் ஒரு இடத்தில் நடக்கிறது. ஒரு ஆறு இரண்டாகப் பிரிந்து ஒரு தெய்வீக சன்னதியைச் சுற்றி ஒடுகிறது.‌ இந்த கருவறையில் ஒருபோதும் வறண்டு காணப்படுவதில்லை. இது இயற்கையும் இறை அருளும் ஒன்றிணைந்த இருக்கும் திருத்தலம். இது எங்கே உள்ளது தெரியுமா?. கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அருகே அமைந்துள்ள கட்டில் துர்கா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உள்ளது.

நதியின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த அம்மனின் வரலாறு அதிசயமானது‌. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. வயல்கள் காய்ந்து. ஆறுகள் வற்றின. பசித்த குழந்தைகள் அழுதன. தண்ணீருக்காக முதியோர்கள் ஏங்கினர். இவை அனைத்தையும் ஒரு முனிவரின் உள்ளத்தை உலுக்கியது.‌ அவர்தான் ஜாபாலி. ‌அனைத்து உயிர்களுக்கும் நன்மை வேண்டி கடுந்தவம் இயற்றினார்.இந்திரன அவர் தவத்தால் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்திரனின் கட்டளை

காமதேனுவின் மகள் நந்தினி. அவளை இந்திரன் அழைத்து பூமிக்கும் சென்று உயிரைக் காப்பாற்றச் சொன்னான். ஆனால் நந்தினியோ பாபங்கள் நிறைந்த பூமிக்கும் செல்ல விருப்பமில்லை. எனக்கூறி அன்னை பார்வதியை சரணடைந்தாள்.‌ அன்னை நந்தினியிடம் நீபசுவாகச் செல்ல வேண்டாம்‌ மக்களின் உயிரைக் காக்கும் நதியாகச் செல் என கட்டளையிட்டாள். நந்தினி நேத்ராவதி நதியாக பூமியில் பாயத் தொடங்கினாள்.‌ அந்த நீரோட்டம் நிலத்தை மட்டுமல்ல, மக்களின் இதயங்களையும் குளிரவைத்தது. ஆனால் நன்மை வளர்ந்த இடத்தில் தீமையும் தலைதூக்கியது.

அருணாசுரன் என்ற அசுரன் பூமியில் எண்ணற்ற கொடுமைகளை செய்தான். மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. இவன் காயத்ரி மந்திரத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருந்ததால் அதை நிறுத்தும் வரை அவனை அழிக்க முடியாது என்பதால் பகவான் பிரகஸ்பதியை அனுப்பி அருணாசுரனை காயத்ரி மந்திரம் உச்சரிப்பை தடுக்கச் சொன்னார்.

வண்டு வடிவம் எடுத்து அருணாசுரனை வதம் செய்த துர்கா பரமேஸ்வரி:

அதன்படி பிரகஸ்பதி அசுரனை புகழ்ந்து பேசி எல்லோரும் உனக்கு அடிமையாக இருக்கும்போது காயத்ரி எதற்கு? நீ இன்பங்களை ரசித்து வா... என்று அவனை உசுப்பி காயத்ரி உச்சரிப்பது நிறுத்த, இத்தருணத்தில் அனைவரும் பார்வதி தேவியை வேண்டினர்.‌ மோகினியாக அவதாரம் எடுத்தாள். அன்னை. அவளைக் கண்டதும் அவளைப் பின் தொடர்ந்தான் அசுரன். அன்னை நேத்ராவதி பாறையின் பின்னால் ஒளிந்துபோல் நின்றாள்.

அவளைப் பிடிக்க அசுரன் முன்னேறியபோது அவள் வண்டு வடிவம் எடுத்து அசுரனை வதம் செய்தாள்.‌ அசுரனை அழித்தும் உக்ரம் தணியவில்லை. அவளை சாந்தப்படுத்த முனிவர்கள் அனைவரும் இளநீரால் அபிஷேகம் செய்தனர்.

நதியின் மடியில் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கும் துர்கா பரமேஸ்வரி கருவறை ரகசியம்:

அவள் சினம் தணிந்து இந்த நதியின் மடியில் என்றென்றும் மக்களோடு இருப்பேன் என்று அருள்புரிந்தாள். நதியின் நடுவே உருவானது அதிசய ஆலயம்.‌ துர்காபரமேஸ்வரி என்ற திருநாமத்தோடு கோவில் கொண்டாள். இங்குள்ள அதிசயம் அம்மன் சிவலிங்க வடிவில் அருள் பாலிக்கிறாள்.‌

Durga Parameshwari Miracle - துர்கா பரமேஸ்வரி
Durga Parameshwari Miracle - துர்கா பரமேஸ்வரிAI Image

சிவலிங்கத்தையே அம்பிகையாகக் கருதி பெண் அலங்காரங்கள் நடக்கின்றன. சக்தியும் சிவமும் ஒன்று என்பதை உணர்த்தும் தலம் இது கட்டி என்றால் இடுப்புப் பகுதி. லா என்றால் பூமி‌ தன்னுடைய மேல்பகுதியை சிவலிங்கமாக மாற்றிக்கொண்டு அந்த நதியில் தேவி மூழ்கி மறந்ததால் அந்த ஆலயம் கட்டிலா என்று அழைக்கப்பட்டு பின் மருவி கட்டில் என்று ஆனது.

கோவிலின் பின்புறம் நேத்ராவதி ஆறு இரண்டாக பிரிகிறது.‌ அந்த இரண்டும் கோவிலைச் சுற்றி இணைகின்றன. இதனால் கருவறை எப்போதும் ஈரமாகவே இருக்கும். நதியின் மடியில் அன்னை அமர்ந்து அருள் தருகிறாள். இங்கு மல்லிகைப்பூ வேண்டுதல் உண்டு.‌ அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலைகளில் உடுப்பி சங்கராபுரம் மல்லிகைக்குத் தனிசிறப்புண்டு.

திருமண தடை இருப்பவர்கள், இழந்த பொருள் கிடைக்க வேண்டுபவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வாழை நாரில் மல்லிப்பூ தொடுத்து அம்மனுக்கு சமர்ப்பிக்கின்றனர்.‌ வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இங்கு பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல் மைசூர் மல்லிகை பாக்கு சந்தனம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாமியார் சண்டை முதல் கிறித்தவப் பூசாரி வரை: தமிழகக் கோயில்களின் 4 அதிரடி விநோத வழிபாடுகள்!
Durga Parameshwari Miracle - துர்கா பரமேஸ்வரி

ரத்தேஸ்வரி, கணபதி ஐயப்பன், நாக தேவதை பிரம்மா ஆகிய தெய்வங்கள் அருள் பாலிக்கிறார்கள். பக்தர்களின் குறைகளை தீர்க்கும் துர்கா பரமேஸ்வரியை தரிசித்து அனைத்து நன்மையையும் பெறுவோம்.

இந்த அதிசய வரலாற்றை வாசிப்பதன் மூலம், உங்கள் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கும், குழந்தை பாக்கியம் மற்றும் திருமண வரன் அமைவதற்கும் எந்தெந்த வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவான ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com