

மருதூர் என்ற கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வேப்பமரம் ஒட்டிய புற்றில் நாகப்பாம்பு வாழ்ந்து வந்தது. கோவில் அருகில் உள்ள புற்று என்பதால், பக்தர்கள் இறைவனை தரிசித்து விட்டு, வேப்பமரத்தையும் சுற்றி வந்து, பக்கத்தில் இருக்கும் பாத்திரத்தில் பால் ஊற்றி விட்டு, 'நாகராஜா' என்று சொல்லி மனதார வேண்டி செல்வது வழக்கம்.
புற்றில் இருக்கும் நாகப்பாம்பு, பக்தர்கள் தன்னை பார்த்து வேண்டிக் கொள்வதைக் முதலில் பெருமையாக நினைத்தது. நாளாக, நாளாக இறைவனுக்கு நிகராக தன்னை நினைத்துக் கொண்டு, தலைக்கனத்துடன சுற்றி வந்தது.
ஒருநாள், அடிக்கடி வேப்ப மரத்துக்கு வந்து போகும் கிளியிடம், மனிதர்கள் தன்னை இறைவனுக்கு இணையாக வணங்கிச் செல்வதை பெருமையாக சொல்லியது.
பொருமையாக கேட்டு கொண்ட கிளி, நல்ல விஷயம் தான், ஆனால் தற்பெருமை கொள்ளாதே. ஆபத்து உனக்கு தான் என்று எச்சரிக்கை செய்தது.