

உங்க ராசியின் பெயர் என்னங்க? நீங்களே சொல்லுங்க. சிங்கம்தானே? பின்னே எதுக்குங்க போன வருஷம் தன்னம்பிக்கை என்ற சமாசாரம் சர்ரென்று குறைஞ்சுது? மத்தவங்க எடுத்துச் சொன்னபிறகு போனால் போகுதுன்னு தைரியத்தை வரவழைச்சுக்கிட்டீங்க. போனது போகட்டும்.. டோன்ட் ஒர்ரி.. இந்த வருஷம் அந்த மாதிரியெல்லாம் ஆகாது. ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கவனமாய் இருந்துட்டீங்கன்னா போதும். மற்றபடி, ஜாலியாத்தான் இருப்பீங்க. நீங்களே பாருங்களேன்.
இந்தப் புது வருடத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் புதிதாக திடீர் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவை சரியாகவும் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது முன்பைவிட ஜாலியாகவும் நிம்மதியாகவும் போவீர்கள். ஆபத்துகள் குறையும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கப் பார்த்தாலும் சில சமயங்களில் முடியாது. ஆனால், ஜாலியாகவே பயணம் செய்யப்போகிறீர்கள்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சற்று பொறுமையுடன் கையாளவேண்டியது அவசியம். சிலருக்கு ஷேர் வியாபாரங்கள் மூலம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. புது வருடத்தின் மத்தியப் பகுதியில், குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும். உடனே டென்ஷனாகிப் போகாதீர்கள். நீங்கள் வரவழைத்துக் கொள்ளப்போகும் மென்மையான விட்டுக்கொடுக்கும் தன்மையால் அவை யாவும் நீங்கும். குடும்ப உறவினர்களுக்கு உதவுவதற்காகச் சிறு அலைச்சல் உண்டாகலாம். கலைஞர்கள் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவீர்கள். உங்க கணவர்/ மனைவி மூலம் நிறைய சந்தோஷம் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதி நிலவும். பிள்ளைகளின் வெளிவட்டாரச் செயல்பாடுகள் பெருமை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குழந்தைகள் உங்கள் உதவியால் மேன்மை அடைவார்கள். பிரார்த்தனைகள் நிறைவேற அதிக முயற்சி எடுப்பீர்கள். எனினும் எண்ணம் ஈடேறும். பயணங்கள் நன்மை தரும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்களில் சில நிறைவேறும். அரசாங்கத்தால் லாபம் ஏற்படும். விரும்பிய பொருட்களில் ஒன்றை வாங்குவீர்கள்.. சுகமும் ஆரோக்கியமும் பெருகும். வருடக் கடைசியில் படிப்படியாக வீண் அலைச்சல் சற்றுக் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டாலும்தான் என்ன? அது நல்ல முறையில் நீங்கும். தேவையற்ற மற்றும் கற்பனை மனக்கவலையை மனதில் இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டாம்.
அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது பழைய அனுபவங்கள் காரணமாக, கவனமாய்ச் செயல்பட்டுப் பிரச்னைகள் வராமல் காத்துக்கொள்வீர்கள்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். புத்திசாதுரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்த ஆர்வம் ஓரளவுக்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்பட்டு, சற்றே முயற்சிகளை அதிகரித்த பிறகே நிறைவேறும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வருவதற்கு வெளி ஆள் தேவைப்படாமல் நீங்களே சரி செய்துகொள்வீர்கள் என்பது நற்செய்தி.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டு ஈடுபடலாம். பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.தந்தைக்கு முன்பிருந்த நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். நண்பர்களால் சிறு நன்மைகள் ஏற்படும். வருடத்தின் ஆரம்பப் பகுதி அதிக மாற்றம் இன்றி நகரும். பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது. நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் மெதுவாய் ஆரம்பித்து, திடீர் வேகம் எடுத்து விரைவாய் நகரும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்பட்டாலும் கடைசியில் நல்லபடியாக முடிந்து ‘ஹப்பாடா’ என்று உங்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்யும் பார்த்துக்கிட்டே இருங்க.
நிர்ப்பந்தமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். விருப்பமில்லாமல் சென்று வெற்றிகரமாக, மகிழ்ச்சியுடன் திரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராதத் திருப்பம் ஏற்பட்டு, அதுவே லாபம் அளிக்கும்.
ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. வருடக்கடைசியில் அவர்களில் சிலரின் கூட்டு முயற்சியாலி பெரிய நன்மை ஒன்று ஏற்படலாம். எனவே, அவர்களுடன் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அவர்களால் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகவும் வாய்ப்புள்ளது.
மற்ற உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தை வழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும்.
ஆண்டின் இறுதிப்பகுதியில் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் எதையும் சமாளிக்கும் அளவுக்குத் திறமை அதிகரிப்பதோடு, சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. ஆமாம்.. சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் பாடு. உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடித்து எதிர்கால நன்மைக்கு வித்திடுவீர்கள்.
புலி வருகிறது... புலி வருகிறது என்றெல்லாம் கதை சொல்வார்களே.. அதெல்லாம் கவலை தரும் விஷயத்துக்கு மட்டும்தான் பயமுறுத்த வேண்டுமா என்ன? பதவி உயர்வு இதோ வருகிறது, சம்பள உயர்வு இதோ வந்தேவிட்டது என்று கடந்த காலத்தில் ஆட்டம் காட்டியதல்லவா? இப்போது நிஜமாய் வரும். நீங்கள் அச்செய்தியை ஆரம்பத்தில் நம்பத்தான் மாட்டீர்கள். பிறகு டான்ஸ் ஆடப்போகிறீர்கள் பாருங்களேன்.
மற்ற ராசிபலன்களை படிக்க Click Here