வருந்தும் மரத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

Aanmiga katturai
பவளமல்லி...
Published on

வளமல்லி, சௌகந்தியா, பாரிஜாதம் சேடல், செண்பக ஞாலகோட்டுப்பூ என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்   பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். அம்மலரை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உதிரும் பூ சுவாமிக்கு

பொதுவாக மண்ணில் உதிர்ந்த பூக்கள் பூஜைக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்ற போதிலும் விதிவிலக்காக இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் பவளமல்லி பூக்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.

மும்மூர்த்திகள்

பவளமல்லியிலுள்ள மூன்று இலைகளில் மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

அமைப்பு

பவளமல்லி இந்தியா முழுவதும் பரவலாக சிறு மரமாக காணப்பட்டாலும், 1500 அடி உயரம்வரை உள்ள இடங்களில் வளரக்கூடியதாகவும், சுமார் 15 அடி உயரம் வரை வளரும், தண்டு பாகம் நான்கு பட்டைகளை உடைய இலைகள் நீண்டு முட்டை வடிவில் சொரசொரப்புடன் இருக்கும் அமைப்பை பெற்றதாகும்.

பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்டவடிவில் உறைஅமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

பாரிஜாத புராணக்கதை

பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாலும், சூரியன் இதனை ஏற்காததால் மனம் உடைந்து தீயில் இன்னுயிரை விட்டதால், இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது என வாயுபுராணம் தெரிவிக்கிறது

இரவில் பூக்கும் காரணம்

பாரிஜாதம் செடி பகலில் தன்னைக் கைவிட்ட சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குவதால் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.

கிருஷ்ணரின் விளையாட்டு

தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ண பகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லி மரத்தை கொண்டு வந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்றுகூறப்படுகிறது.

ஆரோக்கிய நன்மைகள்

பவளமல்லி நீரிழிவு நோயாளிகளுக்கும், கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலையும் ,வேர் பல்லீறுகளில் உருவாகும் வலியையும், விதைகளை பௌடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்களுமஂ தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும்  பவள மல்லிவிதைப் பொடியை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை மறைந்து முடி வளரும்.

இதையும் படியுங்கள்:
மூன்றாம் நாள் - மன நிம்மதி அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி!
Aanmiga katturai

தலவிருட்சம்

திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

கேது தோஷம் நீங்கும்

துர்வாசருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து அருளினார். திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

குழந்தை வரம்

ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்குபவராக  ஈசன் இருப்பதால்  பவளமல்லி இங்கு தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com