கோபுரத்தில் ஏற்றும் கோமேதகத்தின் பலன்கள் பற்றித் தெரியுமா?

garnet stone
Benefits of garnet stoneImage Credits: Valltasy
Published on

ழங்கால நூல்களில் கோமேதகத்தை பசுவின் சிறுநீர் என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது பார்ப்பதற்கு பசுவின் சிறுநீரை போன்ற நிறம் கொண்டதாக இருக்கும். தோசமற்ற கோமேதகத்தை அணிந்தால் எதிரிகளை கூட வெல்லலாம்  என்று கூறப்படுகிறது. இதை அணிவதால் உடல் ஆரோக்கியம், செல்வ செழிப்பை கொடுக்கிறது.

கோபம் குறைய, ராகு திசையை சரி செய்வதற்கு, கெட்ட எண்ணங்கள், கெட்ட கனவு, பயம் ஆகியவற்றை போக்க கோமேதகம் பயன்படுத்தலாம். இந்த கல்லை சற்று பெரிதாகவே வாங்கி அணியலாம். மற்ற ரத்தினங்களை ஒப்பிடுகையில் கோமேதகம் சற்று விலை குறைவு. ராகு திசை நடக்கும் பெண்கள் கோமேதகத்தை மோதிரமாக அணிவதை விட Pendent ஆக போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. ஆண்கள் இதை விரலில் மோதிரமாக போட்டுக் கொள்ளலாம். இதை விரல்களில் போடும்போது இடது கையில் நடுவிரலில் போடுவது நல்லது.

இந்த கல்லை வாங்கும் போது கரும்புள்ளிகள், விரிசல் இருக்கிறதா? என்று பார்த்து வாங்குவது நல்லது. சாதாரணமாக 5 carat பயன்படுத்தலாம். இந்த மோதிரத்தை தங்கம், வெள்ளியில் செய்து அணிந்து கொள்ளலாம். வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் அணிந்து கொள்வது சிறந்தது. இந்த கல்லை வியாழக்கிழமை போடும்போது அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். சனிக்கிழமை போடும்போது நெகட்டிவ் எண்ணங்களை சரி செய்து விடும்.

கோமேதகம் மாலையாக கூட கிடைக்கும். இதை வைத்து தியானம் போன்றவை செய்யலாம் நல்ல அமைதியான மனநிலை கிடைக்கும். இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், குறிப்பாக ராகு திசை, ராகு புத்தி நடக்கிறது என்றால் பயன்படுத்தலாம். திருவாதிரை, ஸ்வாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்தலாம். 22,13,31 இந்த எண்களில் பிறந்தவர்கள் அணியலாம்.

இதை அணிவதால் திருமண தடையை நீக்கும், அதிர்ஷ்டத்தை அதிகரித்து கொடுக்கும், நெகட்டிவ்வாக பேசியவர்களை பாசிட்டிவாக மாற்றும், மற்றவர்களின் மீது உள்ள தவறான புரிதலை மாற்றும். இந்த கல்லை முதலில் அணியும்போது கிழக்கு அல்லது மேற்கு திசையை பார்த்து போடலாம். இந்த கல்லை ஒரு நாள் முழுவதும் கோமியத்தில் ஊற வைத்து பயன் படுத்துவார்கள். அப்போதுதான் அந்த கல்லில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி போகும் என்று நம்பினார்கள்.

இதையும் படியுங்கள்:
வியக்க வைக்கும் வைடூரியத்தின் பலன்கள்!
garnet stone

இந்தக் கல்லை பலவிதமாக பயன்படுத்தலாம். Healing purpose Crystal ஆக பயன்படுத்தலாம். Pendent, ring ஆக பயன்படுத்தலாம். தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், ஸ்ரீலங்கா, பர்மா போன்ற நாடுகளிலும் கோமேதகம் கிடைக்கின்றன.

இந்தல் கல் அணிவதன் மகத்துவம் கண் திருஷ்டியை போக்கும், தோல் நோய்களை நீக்கும், தீய கனவுகள் வராது. இத்தாலியில் இந்த கோமேதகக் கல்லை ‘விதவைகளின் கல்’ என்று அழைத்தனர். ஏனெனில் கணவனை இழந்த மனைவிகள் துயரத்தை போக்க இந்த கல்லை அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com