மரகதக் கற்களின் பயன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

Emerald Stone
Emerald Stone BenefitsImage Credits: Pngtree

ண்டைய காலத்தில் நவரத்தின கற்களை ஆசனத்திலும், சுவற்றிலும் பதித்து ராஜாக்கள் தங்களது செல்வாக்கை காட்டினார்கள். இதையெல்லாம் அழகுக்காக மட்டும் தான் செய்தார்களா? என்று கேட்டால் இல்லை. இதற்கு பின்பு காரண காரியத்தோடுதான் நம் முன்னோர்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

மரகதத்தால் செய்யப்பட்ட சாமி சிலைகள் வழிபாடு புராதாண காலங்களில் இருந்தே இருக்கிறது. நவகிரகங் களில் ஒன்றான புதனுக்கு உரியது மரகதமாகும். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழசக்கரவர்த்தி ஒருவர் இந்திரனின் மரகத லிங்கத்திற்காக ஆசைப்பட்டு அவரை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவர் தவத்தை பார்த்து இந்திரனும் என்ன வரம் வேண்டும்? என்று கேட்க மன்னர் மரகதலிங்கத்தை வேண்டியுள்ளார். அதை கொடுக்க மனமில்லாத இந்திரன் அதைப்போலவே ஆறு மரகதலிங்கத்தை உருவாக்கி அதில் எது தன்னுடையதோ அதை கண்டுப்பிடித்து எடுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

மன்னரும் அதில் சரியான லிங்கத்தை கண்டுப் பிடித்துவிட ஆச்சர்யமடைந்த இந்திரன் மீதமிருந்த 6 மரகத லிங்கத்தையும் அவரிடமே கொடுத்துவிட்டார். அதை எடுத்து வந்த அரசன் ஏழு கோவில்கள் அமைத்து அதில் அந்த 7  மரகதலிங்கத்தையும் நிறுவினார். வேதாரண்யம், திருக்குவளை, திருகரவாசல், திருவாரூர், திருநள்ளார், நாகப்பட்டிணம், திருவாய்மூர். இந்த ஏழு கோவில்களில் இன்றைக்கும் மரகத லிங்கங்கள் உள்ளது.

எத்தனையோ கற்கள் இருந்தாலும் முக்கியமான நவரத்தின கற்கள் கொடுக்கக்கூடிய பலன்கள் மிக அதிகம். அதிலும் மரகதக்கல் கொடுக்கக்கூடிய பலன் எண்ணற்றதாகும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மீனாட்சி சிலை மரகதப்பச்சை கற்களால் செய்யப்பட்டது. அதனாலேயே அக்கோவிலில் அதிக அதிர்வலையும், சக்தியும் பெற்றிருக்கிறது. மரகதக்கல் நல்ல அறிவாற்றலை தரும். படித்து நல்ல உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் மரகதக்கல்லை அணியலாம். பச்சை நிறம் குபேரனுக்கு உகந்த நிறம். வீட்டில் செல்வம் தங்குவதற்கு மரகதக்கல்லை அணிவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
தமிழரின் தொன்மையான தற்காப்புக்கலை: ஒரு பார்வை!
Emerald Stone

மிதுன ராசி, கன்னி ராசிக்காரர்கள் மரகதத்தை பயன்படுத்தலாம். ஆயில்ய நட்சத்திரம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்தலாம். புத்திக்கூர்மைக்காக பயன்படுத்தலாம். வியாபாரம் செய்யும் அனைவருமே இந்தக் கல்லை அணியலாம். மரகதக் கல் வைத்து மோதிரமாக செய்து சுண்டு விரலில் அணிவது நல்லது. அப்படி இல்லையேல் மோதிர விரலில் அணியலாம்.

மரகதக்கல்லை வாங்கும்போது உள்ளே உடைந்தது போல தெரிந்தால் வாங்க வேண்டாம். அத்தகைய கல் எந்த அதிர்வலைகளையும் தராது. மரகதக்கல்லை மோதிரமாக வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம். வளர்பிறை புதன் கிழமையில் காலை நேரத்தில் இதை அணிவது நல்லதாகும். மரகதக்கல்லில் உள்ள எண்ணற்ற பயன்களை பெறுவதற்கு அதை அணிந்தால் மட்டுமே அதன் சிறப்பை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com