மனக்குறையை போக்கும் மணக்குள விநாயகர்!

மணக்குள விநாயகர்
மணக்குள விநாயகர்

விக்னங்கள் தீர்க்கும் விநாயகா!

ந்த ஒரு காரியமும் வெற்றி அடைய, தடங்கல்கள் நீங்க விநாயகப் பெருமானை வணங்குகின்றோம். மஞ்சளில் பிடித்து வைத்து வணங்குகின்றோம்... மனதில் தோன்றியதை நிறைவேற்றுபவர்தான் விநாயகப் பெருமான்.

பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். புதுச்சேரியின் வரலாறு துவங்கும் தொட்டே இத்திருத்தலத்தின் வரலாறும் தொடர்கிறது.

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோவில்தான் மணக்குள விநாயகர் கோவில். இக்கோவிலின் மேல்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகே இருந்ததால் மணல் அதிகமாக வந்ததாகவும் அதனால் அக்குளத்திற்கு மணற்குளம் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்த மணற்குளத்தின் கீழ்க்கரையில் இந்த கோவில் எழுப்பப்பட்டதால் மணற் குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இங்கே விநாயகருக்கு கோபுரம் முழுக்க தங்கத்தால் வேயப்பட்டது. இத்தலத்தில் சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!
மணக்குள விநாயகர்

இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு தொள்ளைக்காது சித்தர் மணக்குள விநாயகர் சன்னதிக்குச் சென்று அவரை தரிசித்து வந்திருக்கிறார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் மறைந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே தொள்ளைக்காது சித்தர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் சித்தர் விநாயகரை கும்பிட்டு வருவதாக நம்பப்படுகிறது. விநாயகர் சந்நிதியை சுற்றி வரும் போது தொள்ளைக்காது சித்தர் படம் இருக்கிறது. பக்தர்கள் சித்தரையும் வணங்குகின்றனர்.

கல்யாண வரம், குழந்தை வரம் இப்படி எந்த வேண்டுதலாக இருந்தாலும் மணக்குள விநாயகர் வேண்டுதலை நிறைவேற்றி அருள்பாலிக்கிறார்.

தரிசித்து வாருங்கள் மணக்குள விநாயகர் பகவானை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com