மிலாடி நபி 2026: முஹம்மது நபியின் வரலாறு, சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்!

நபிகள் நாயகத்தின் வாழ்வியல் போதனைகள் மற்றும் மிலாடி நபியின் முக்கியத்துவத்தை விரிவாக அறிவோம்.
மிலாடி நபி - Milad un Nabi 2026
மிலாடி நபி - Milad un Nabi 2026Image credit - Gemini
Updated on

மிலாடி நபி தினம், கிபி 570ல் மக்காவில் பிறந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை குறிக்கும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய நாட்காட்டியில் ரபிஉல் அவ்வல் மாதத்தில் வரும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். ஐந்து வேளை தொழுகை, ரமலான் நோன்பு, ஹஜ், ஜகாத், ஏழைகளுக்கு உதவி, சக மனிதருக்கு அன்பு போன்ற நபியின் உபதேசங்கள் இந்த நாளில் மீண்டும் நினைவூட்டப்படுகின்றன.

மிலாடி நபி என்பது இஸ்லாமியர்களின் கடைசி முஹமது நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை குறிப்பதாகும்.

இது இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபிஉல் அவ்வல் மாதத்தின் பனிரெண்டாம் நாள் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் நல்வழி போதனைகள் வாழ்க்கை வரலாறு மற்றும் மனிதநேய கருத்துக்களை கடைப் பிடிக்கப்படுகின்றன.

அன்றைய தினம் பள்ளிவாசல் மற்றும் வீடுகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். மிலாது நபி கூட்டங்கள் மற்றும் புகழ்ச்சி பாடல்கள் பாடப்படும்.

ஏழைகளுக்கு உணவு வழங்குதல் இனிப்பு வழங்குதல் இத்திருநாளில் முக்கிய பகுதி ஆகும். மக்கள் இவரை அல் அமீன் என்றும் சாதிக் என்றும் பாராட்டினார்கள்.

தனது 23 வது வயதில் இவர் கதீஜா அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். நாற்பதாம் வயதில் இவர்களை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தார். நாயகம் சல் அவர்களுக்கு 11மனைவிகள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள்.

பாத்திமா அம்மையார் பெண்களின் தலைவி என போற்றப்படுகிறார்.

நபிகள் நாயகம் இறைவனின் தூதராக அறிவிக்கப்பட்ட பின் நான் அவருடைய தூதராக இருக்கிறேன் என்று சொன்னார். நபிகள் நாயகம் 63 வயது வரை வாழ்ந்தார்கள்.

அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே மிலாடி நபி என அழைக்கின்றனர்.

இதுவும் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடுகிறார்கள். இது பக்ரீத் பண்டிகைக்கு அடுத்ததாக கொண்டாடப்படுகிறது.

மிலாடி நபி - Milad un Nabi 2026
மிலாடி நபி - Milad un Nabi 2026Image credit - Gemini

முஹம்மது நபி ஸல் அவர்கள் நபிகள் நாயகம் என அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். தாய் தந்தையை பராமரிக்க வேண்டும். சக மனிதனை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிறிய உயிர்கள் இடத்தில் அன்பு காட்ட வேண்டும். இவையே நபிகள் நாயகம் அவர்கள் உபதேசங்களை வழங்கினார்கள்.

ஐந்து வேளை தொழுகை நிறைவேற்றுங்கள். ரமலான் மாதம் நோன்பு வையுங்கள். வசதி உள்ளவர்கள் ஹஜ் யாத்திரை செல்லுங்கள் என்றார். அரபு மொழியில் மௌலித் என்றால் பெற்றெடுத்தல் கருத்தரித்தல் வம்சாவளி என்று பொருள்.

இந்த சொல் எகிப்து போன்ற பகுதிகளில் முக்கிய வசனமாக கருதப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளை மிலடி நபியாக கொண்டாடுகின்றனர்.

முஹம்மது நபி கிபி 570 ஆம் ஆண்டு ரபி உல் அவ்வல எனப்படும். இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில் 12 நாள் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக கொண்டாடினர். சியா முஸ்லிம்கள் ரபி உல் அவ்வல் மாதத்தின் 17 வது நாள் கொண்டாடுகிறார்கள் சன்னி முஸ்லிம்கள் ரபிஉல் அவ்வல் மாதத்தில் பனிரெண்டாவது நாளை மிலாடி நபி ஆக கொண்டாடுகிறார்கள்.

மிலாடி நபி சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. இவை ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். இந்த நாளில் இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கிய கடமையாக கருதுகிறார்கள். இந்நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
ஒரே கூரையின் கீழ் தனித்தனியா? குடும்ப உறவுகளை இணைக்கும் 20 நிமிட அதிசயம்!
மிலாடி நபி - Milad un Nabi 2026

முகமது நபி ஸல் அவர்கள் உலமாக்கள் அனைவருக்கும் இறைவனின் தூதராக அனுப்பப்பட்டவர். ரமலான் மாதத்தில் நோன்பு வையுங்கள். வசதி இருப்பவர்கள் ஆண்டு வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தர்மம் செய்யவேண்டும். ஹஜ் புனித யாத்திரை செல்வது போன்ற கடமைகளை செய்கிறார்கள்.

இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம் மிலாடி நபி திருநாளின் உண்மையான புனிதத்தையும், நபிகள் நாயகம் மனிதகுலத்திற்கு வழங்கிய வாழ்வியல் நெறிமுறைகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் நல்வழியைப் பெறுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
கர்பலா தியாகம் முதல் கத்தி போடும் திருவிழா வரை: மொகரம் மாதத்தின் முழு உண்மைகள்!
மிலாடி நபி - Milad un Nabi 2026
logo
Kalki Online
kalkionline.com