அவசியம் அறிய வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

அவசியம் அறிய வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

*வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.

*திருக்கோயிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

*அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

*கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்களைக் கழுவலாம். ஆனால், குளிக்கக் கூடாது.

*எலுமிச்சை விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

*சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும்போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

*சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

*நல்ல காரியங்கள் பற்றிப் பேசும்போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

*திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர், இராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.

*ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும்பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

*கோயில் மூடியிருக்கும்போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

*குங்குமத்தை வலது கை மோதிர விரலால் இட்டுக் கொள்வதே நல்லது.

*விக்ரஹத்துக்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.

*இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

 *பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

*கர்ப்பிணிப் பெண்களோ, அவர்களது கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

logo
Kalki Online
kalkionline.com