55 அடிகளுக்கு மேல் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் அதிசய சிவலிங்கம்!

Endala Mallikarjuna Swamy
Endala Mallikarjuna SwamyImg Credit: AP Tourism Authority
Published on

அரிதான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக சிலைகளுக்கு பெயர் போனது தெலுங்கு மண். பழங்காலத்தின் அனைத்து சிவலிங்கங்களும் அளவில் சிறியவையாக இருந்தன. மேலும் அவை அனைத்தும் சுயம்பு லிங்கங்களாக இருந்தன. எனினும் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ஒன்று ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தெக்காலி என்ற பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் ரவிவாலாசாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இத்தனை பெரிய சுயம்புலிங்கம் ரவிவலாசாவில் இருப்பதை மிகச் சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். அது 55 அடி உயரம் கொண்டது. அதன் மேற்பகுதி மூடப்படாத நிலையில் கோயிலின் அமைப்பும் மேற்கூரை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை இல்லாத காரணத்தால் சிவலிங்கம் எப்பொழுதுமே சூரிய வெளிச்சத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த கடவுள் 'Endala Mallikarjuna Swamy' என்றும் அழைக்கப்படுகிறார்.

1824 ஆம் ஆண்டில் எண்டாலா மல்லிகார்ஜுனா சுவாமி கோயிலை தெக்காலி சம்ஸ்தான தேஷா ஹரி சந்தன புருந்தவன ஜகதீஷ் சீரமைத்து மீண்டும் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சம்ஸ்தான தேஷா கோயிலை மேற்கூரையுடன் கட்டியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் அடுத்த நாளே அந்த மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது! இவ்வாறு மூன்று முறை நடந்துள்ளது. ஒரு நாள் சிவபெருமான் கனவில் தோன்றி நான் தினம் தினம் வளர்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் மேற்கூரை கட்ட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக சம்ஸ்தான தேஷா மேற்கூரை இல்லாமல் கோயிலை அமைத்துள்ளது. அனைத்து பூஜைகள் மற்றும் அபிஷேகங்களை மண்டபத்தில் இருந்து செய்வோம் என்றும், தேவைப்பட்டால் ஒரு ஏணி வைத்து சிவலிங்கத்தின் உச்சியை அடைவோம் என்றும், கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை மாசம் மற்றும் மகா சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
பகவான் கிருஷ்ணனே சிபாரிசு செய்த மூச்சுப் பயிற்சி!
Endala Mallikarjuna Swamy

ஸ்தல புராணம்:

இராவண சாமராஜ்யம் அழிக்கப்பட்டு இலங்கையிலிருந்து அயோத்தியாவுக்கு ஸ்ரீ ராம கடவுள் செல்லும் பொழுது தம்மை பின்பற்றுபவர்களுடன் சுமாஞ்சா மலையில் தங்கினார். அவருடைய குழுவில் இருந்த ‘கடவுள்களின் மருத்துவரான’ சுசீனா அந்த மலைப்பகுதி முழுவதும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை செடிகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இந்த மலையை சுற்றி அவ்வளவு மருந்துகள் இருந்தும் அப்பகுதி மக்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டு இருப்பதை கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். அந்தப் பகுதியில் உள்ள மக்களின் நோய்களை தீர்ப்பதற்காக, தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய இந்த முடிவு குறித்து ஸ்ரீராமனிடம் தெரிவித்து, சுமாஞ்சா மலையில் தான் தவம் புரிய நினைப்பதாக சுசீனா கூறினார். உடனே ஸ்ரீராமனும் அவருடைய ஆசையை நிறைவேற்றி அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, தன்னுடைய குடும்பம் மற்றும் தம்மை பின்பற்றுபவர்களுடன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். பின்னர் சுசீனா சுமாஞ்சா மலையில் சிவபெருமானுக்காக கடுமையான தவம் புரிந்தார்.

சிறிது நேரம் கழித்து சுசீனா என்ன செய்கிறார் என்பதை பார்ப்பதற்காக ஸ்ரீராமன் அனுமானை அனுப்பி வைத்தார். அனுமான் சுமாஞ்சா மலை பகுதிக்கு வந்தபோது அவரால் சுசீனாவின் உடலை மட்டுமே பார்க்க முடிந்தது. உடனடியாக சுசீனாவின் உடலை அனுமான் அடக்கம் செய்துவிட்டு, அதன் மீது மல்லிகைப் பூக்களை தூவி அதனை மானின் தோல் கொண்டு மூடினார். இந்த விஷயங்களை ஸ்ரீராமனிடம் தெரிவித்தார். விஷயத்தை கேள்விப்பட்ட ராமன், சீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமானுடன் சுமாஞ்சா மலைக்கு வந்தனர்.

இதையும் படியுங்கள்:
சக்தி மிக்க சாயா சோமேஸ்வரர் ஆலயம்!
Endala Mallikarjuna Swamy

சுசீனாவின் உடலை காட்டுவதற்காக அனுமான் தான் போர்த்தி வைத்திருந்த மானின் தோலை நீக்கினார். அவர் மானின் தோலை நீக்கியவுடன் சுசீனாவின் உடலில் இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. மேலும் அதன் மீது பூக்கள் காணப்பட்டன. உடனடியாக ஸ்ரீ ராமன், சீதா மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் அருகில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு சிவலிங்கத்தை வழிபட துவங்கினார். அந்த சிவலிங்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை அவர் கண்டுபிடித்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள மருந்து மற்றும் மூலிகைகளின் வாசனை சிவலிங்கத்தை காற்று மூலமாக வருடுவதை கவனித்தார்.

இந்த சிவலிங்கத்திற்காக ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று ஸ்ரீராமன் எண்ணினார். ஆனால் சிவலிங்கம் வளர்ந்து கொண்டே இருந்ததால் அவர் அந்த யோசனையை கைவிட்டார். அதிலிருந்து சிவலிங்கம் தொடர்ச்சியாக வளர்ந்து தற்போது ஒரு மகாலிங்கமாக உருவெடுத்துள்ளது.

இந்த 55 அடி சிவலிங்கத்திற்கு எப்படியாவது ஒரு நிரந்தர அமைப்பு கட்டி விட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கூறி வந்துள்ளனர். ஆனால் பூசாரியின் கனவில் தோன்றிய சிவபெருமான் தான் தினம் தினம் வளர்வதாகவும், அதனால் இந்த கோவிலுக்கு மேற்கூரை கட்ட வேண்டாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

வாய்ப்புள்ளவர்கள் கிடைக்கும் போது வாழ்வில் ஒரு முறை இந்த திருக்கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு  அவனருளை பெறுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com