திரௌபதி தொடங்கி வைத்த பதுகம்மா திருவிழா!

bathukamma telangana festivals
Anmiga katturaigal
Published on

தெலங்கானாவில் பெண்களால் விதவிதமான மலர்களைக் கொண்டு  கொண்டாடப்படும் மிக அழகான மற்றும் வண்ணமயமான பண்டிகைகளில் ஒன்று பதுகம்மா பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழா  ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். இந்த வருடம் இந்த விழா  அக்டோபர் 1 ந் தேதி  தொடங்கி  9ம் தேதி முடிவடைகிறது.

மழைக்காலத்தின் பிற்பகுதியில், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்தப் பண்டிகை வருவது விசேஷம். பதுகம்மாவில் பயன்படுத்தப்படும் பூக்கள் குளங்களில் உள்ள தண்ணீரை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டவை,  எனவே, ஆறு, குளங்களில் விழா முடிவில் கரைக்கப்படும் பூக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக உள்ளன. மரப்பலகையின் மேல் தாம்பாலத்தில் விதவிதமான பூக்களை கோபுரமாக அடுக்கி வைத்து பார்வதி தேவியை இந்த வடிவத்தில் வணங்குகின்றனர். மலர் அடுக்குகளில் பெரும்பாலானவை மருத்துவ குணங்கள் கொண்ட பல்வேறு தனித்துவமான பருவகால மலர்களால், கோயில் கோபுர வடிவத்தில் ஏழு அடுக்குகளில் அமைக்கப்பட்டவை. பெண்கள் பாரம்பரிய புடைவைகளை உடுத்தி, நகைகள் மற்றும் பிற அணிகலன்கள் அணிந்து பதுகம்மா பாடல்களைப் பாடியபடியே இந்த மலர் அடுக்குகளை சுற்றி வந்து வணங்கி வழிபடுவர்.

பதுகம்மா திருவிழாவின் தோற்றம் துவாபர யுகத்தில் என புராணங்கள் கூறுகின்றன, ஒரு சமயம் காட்டில் பாண்டவர்கள் காணாமல் போகும்போது, திரௌபதி அவர்களை எல்லா இடங்களிலும் தேடுகிறாள். காட்டில் வளரும் பூக்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கிறாள். இறுதியாக, அவள் தங்கெடு பூவிடம் (ஆவாரம்பூ) கேட்கிறாள், ஆனால் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை. எந்த உதவியும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த திரௌபதி தங்கேடுவை சபிக்கிறாள். தங்கேடு மலர் அவளிடம் மன்னிக்க வேண்டும்போது, திரௌபதி பதுகம்மாவின் மலர் தெய்வத்தை உருவாக்கி பெண்கள் தங்கெடு பூக்களை முக்கிய பூஜை பொருளாகப் பயன்படுத்துவார்கள் என்று வரம் அளிக்கிறாள்.

இதையும் படியுங்கள்:
எட்டாம் நாள் - கல்விக் கடலின் கரை காண, தோணியாவாள் கலைவாணி!
bathukamma telangana festivals

இதனால் திரௌபதி தங்கெடு மலர்களால் மலர் தேவியைத் தயார் செய்து பதுகம்மா வழிபாட்டைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது தெலங்கானா. பழங்குடி மக்களின் பாடல்களிலிருந்து தெரிய வருகிறது என வரலாற்றாசிரியரும், அரசாங்கத்தின் பழங்குடி அருங்காட்சியகத்தின் காப்பாளருமான டாக்டர் சத்யநாராயண தியாவனப்பள்ளி  பதுகம்மா திருவிழாவின் தோற்றம் குறித்து கூறுகிறார்.

தெலங்கானா அரசு ஒவ்வொரு ஆண்டும் பதுகம்மா பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறது. இயற்கையின் அழகையும், தெலங்கானா மக்களின் உணர்வையும், பெண்களின் அசைக்க முடியாத பக்தி உணர்வையும், பிரதிபலிக்கும் விழாவாக இது விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com