போகர் பிரதிஷ்டை செய்த தசபாஷான பூம்பாறை முருகன்!

பூம்பாறை முருகன்...
பூம்பாறை முருகன்...

ழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி முருகனை நவபாஷானத்தில் செய்து போகர் நிறுவினார். உலகிலே அது ஒன்று மட்டுமே நவபாஷான சிலை என்று நிறைய பேர் நினைப்பதுண்டு. ஆனால் அது உண்மையில்லை!

பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலையையும் போகரே செய்து நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை தசபாஷானத்தால் செய்தார் என்று கூறப்படுகிறது. அதாவது பத்து பாஷானங்களை கொண்டு செய்யப்பட்டது என்று பொருள். அதனால் இந்த சிலையில் செய்யப்படும் அபிஷேக பாலைஅருந்தினால் புற்றுநோய், சக்கரை வியாதி போன்ற நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது.

இந்த கோவில் கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள பூம்பாறை கிராமத்தில் உள்ளது. இந்த முருகன் நினைத்தால்தான் நாம் அவரை தரிசிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவிலே உள்ள யானை முட்டி மலையில் தான் மூலிகைகளை வைத்து நவபாஷான சிலையை உருவாக்கினார் போகர். அந்த முருகனை பழனியில் நிறுவினார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அவர் தண்டாயுதபாணியானார்.

பின்பு மறுபடியும் சீன நாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று மறுபடியும் யானை முட்டி மலைக்கு வந்து தசபாஷான சிலையை உருவாக்கினார். அந்த சிலையை அங்குள்ள திருமண மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்தார்.

பூம்பாறை முருகன்
பூம்பாறை முருகன்

ஒருமுறை அருணகிரி நாதர் பூம்பாறைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது நேரமாகி விட்டதால், கோவில் மண்டபத்திலேயே படுத்து உறங்கி விட்டார். அப்போது அவரை கொல்ல ராட்சசி ஒருத்தி வர, முருகன் குழந்தை வடிவெடுத்து அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடினார். அதை கண்ட ராட்சசி தாயும் குழந்தையும் தான் என்று நினைத்து அருணகிரி நாதரை எதுவும் செய்யாமல் சென்றுவிட்டாள். இதை ஞான திருஷ்டியில் பார்த்த அருணகிரி நாதர், முருகனை “குழந்தை வேலர்” என்று அழைத்தார். அந்த பெயரே முருகனுக்கு நிலைத்து விட்டது.

இந்த கோவிலில் முருகப்பெருமானுக்கு அருகில் அருணகிரி நாதருக்கும் சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
அதிகாலை சூரியக் குளியலில் உள்ள நன்மைகள்!
பூம்பாறை முருகன்...

இங்கே வேண்டுதலுக்கு முடி காணிக்கையாக கொடுக்கும் வழக்கம் உள்ளது. அது மட்டுமல்லாமல் இங்கே முருகர் சிலையின் தலையிலே சந்தனத்தை கோவில் சாத்தும் வேளையில் வைத்து விட்டு அடுத்த நாள் காலையில் அதை எடுத்து ராக்கால சந்தனம் என்று பக்தர்களுக்கு கொடுப்பார்கள். இந்த சந்தனத்திற்கு நோய் தீர்க்கும் குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் பூம்பாறை முருகருக்கு தேர் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழாவை தை அல்லது மாசி மாதத்தில் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com