அதிகாலை சூரியக் குளியலில் உள்ள நன்மைகள்!

Benefits of early morning sun bathing
Benefits of early morning sun bathinghttps://www.theweek.in

தினமும் குறைந்தபட்சம் பத்து நிமிட சூரியக் குளியல் நமக்கு பல்வேறு வகைகளில் பலன் தருவதாகும். சருமத்தின் மேலடுக்கில் காணப்படும் நைட்ரிக் ஆக்சைட் சூரிய ஒளியில் பட்டு இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தினமும் காலை குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் முதல் பத்து நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு, அரிக்கும் சரும அழற்சி, மஞ்சள் காமாலை, தடிப்பு மற்றும் பூஞ்சை சருமத் தொற்று நோய்கள் முதலிய பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றாலே சரும நோய்கள்  அனைத்தும் நம்மை விட்டு பறந்தே போய்விடும். ஆனால், நீண்ட நேரம் சூரிய ஒளியில் நின்றால் சருமம் கறுத்து விடும். அதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

அதிகாலை பத்து நிமிடம் சூரிய ஒளியில் நிற்பதால் புற்றுநோய் வருவதைக் கூட தவிர்க்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுத்து விடுமாம்.

இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கியப் பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி குறைபாடு இருப்பதால் இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரிடும். அது டைப் 2 நீரழிவு நோயை உண்டாக்கும். நம் சருமம் அதிக வைட்டமின் டி உற்பத்தி செய்ய நாம் தினமும் பத்து நிமிடமாவது சூரிய ஒளியில் நிற்க வேண்டியது கட்டாயம். அதுவும் அதிகாலை சூரிய ஒளியில்.

அதிகாலை சூரிய ஒளியில் நிற்பதால் அது சருமத்தில் பட்டு சருமம் வைட்டமின் டியை உற்பத்தி செய்யும். அதன் மூலம் பார்வை வலுப்பெறும். வைட்டமின் டிக்கான மிகப்பெரிய ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது. இது நம் உடலில் கால்சியம் உண்டாக்கவும் உதவுகிறது.

கீல்வாதம் அல்லது ஆஸ்ட்ரியோ பொரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்களை தடுப்பதில் சூரிய ஒளி முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் காலை சூரிய ஒளியை தவறாமல் பயன்படுத்திக்கொண்டால் அவர்களுக்கு ரிக்கெட்ஸ் என்னும் நோய் வராமல் பாதுகாக்கலாம். இதற்கு வைட்டமின் டி ஒரு கவசமாக செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மக்கி கி ரோட்டியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிவோமா?
Benefits of early morning sun bathing

காலை நேர சூரிய ஒளி நமது நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்பட உதவுகிறது. சூரிய ஒளியில் இருக்கும் வைட்டமின் டி லிம்போசைட் எனப்படும் வெள்ளை இரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது சரியாக வேலை செய்ய உதவுகிறது. இதனால் உடலை பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.

அதிகாலை சூரிய ஒளியை கண் இமைகள் மீது விழ வைப்பதன் மூலம் கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அதிகாலை சூரிய ஒளி அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. காலை நேர சூரியக் குளியல் உடலையும் மனதையும் அழுத்தமில்லாமல் வைத்திருக்கிறது. அதிகாலை சூரிய ஒளிதான் மிகவும் நல்லது என்பதை மனதில் கொள்ள வேண்டும். காலை 9 மணிக்கு பிறகு வரும் சூரிய ஒளி நமக்கு உடலில் கெடுதலை செய்யும்.

காலை நேர சூரிய ஒளி உடம்பில் படுவதே மிகவும் சிறந்தது. ஏனென்றால், காலை சூரிய ஒளியில்தான் நன்மைகள் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும், புற ஊதா கதிர்கள் அந்த அளவு வலுவாக இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com