

நாணயத்தில் பொறிக்கப்பட்ட பிரகதாம்பாள் அம்மன் (அரைக்காசு அம்மன்) வரலாறு மற்றும் வேங்கை வாசல் பெயர்க்காரணம் குறித்த அரிய தொகுப்பு.
இத்தலத்திற்கு ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை இந்திரனின் அவையில் கூடியிருந்த போது எல்லோரும் குறித்த நேரத்தில் வந்துவிட்டார்கள். தெய்வப்பசுவான காமதேனு மட்டும் தாமதமாக வந்ததால் கோபத்தில் இந்திரன் காமதேனுவை பூமியில் பசுவாக பிறக்க சாபம் தந்து விட்டார். காமதேனு பூமியில் சாதாரண பசுவாக பிறப்பெடுத்த அதை வசிஷ்டர் அன்போடு பேணிப் பாதுகாத்தார். பூமியில் பிறந்த போதிலும் அதற்கு மனிதனுடன் பேசும் ஆற்றல் இருந்திருக்கிறது. ஒருநாள் முனிவரிடம் தனக்கு சாபவிமோசனம் ஏற்பட என்ன வழி என்று கேட்க அவர் பாரதத்தின் தென்பகுதியில் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழமரங்கள் நிறைந்த காட்டில் தவம் இயற்றும் கபிலர் முனிவரைப் சென்றடைய சாபம் நீங்கும் என்றார்.
பசுவும் கபிலரிடம் சென்று வேண்டியது. அவர் மகிழவனத்தில் ஒரு சிவாலயத்தில் வகுளவனேஸ்வரர் என்ற நாமத்தோடு அருள் பாதிப்பதாகவும் அவருக்கு தினமும் கங்கை நீரால் அபிஷேகம் செய்ய சாபம் நீங்கும் என்றார். அவ்வாறே பசுவும் கங்கை நீரை காதில் ஏந்தி ஈசனுக்கு புனிதநீராட்டியது. இந்நிலையில் அது ஒரு கன்றை என்று பாலூட்டிகள் கொண்டிருந்தது.வழக்கமான இறைவன் பணிக்காக காதுகளின் நீரோடு வரும்பேது ஒரு வேங்கை அதை இரையாக்க முயன்றது. தான் சிவனுக்கு அபிஷேகம் செய்து பசுவுக்கும் பால் ஊட்டிய பிறகு அதற்கு இரையாவதாக கூற வேங்கையும் வழிவிட்டது.
தனக்கு அபிஷேகம் செய்த பசுவின் பக்தியால் மகிழ்ச்சி அடைந்த ஈசனே வேங்கை வடிவில் வந்திருந்தார். பசு தன் வேலைகளை முடித்துவிட்டு வேங்கையின் முன் நின்றது. மகிழ்ச்சியடைந்தசிவபெருமான் ரிஷப ஆரூடராக தம் தேவியோடு காட்சி அளித்து பசுவுக்கு நற்கதி அருளினார். வேங்கையாக உருவாகி சிவன் வழிமறித்த இடம் வேங்கை வாசல் என் வழக்கப்படுகிறது.
காதுகளால் கங்கை நீரை கொண்டு வந்ததால் திருகோகர்ணம் என்று வழங்கப் படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இதில் உறையும் ஈசன் கோகர்ணேஸ்வர்.அம்மன் பிரகதாம்பாள்.புதுக்கோட்டை மன்னன் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட அரைகாகாசு நாணயத்தில் பிரகதாம்பாள் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த அம்மனுக்கு அரைக்காசு அம்மன் என்ற பெயரும் உண்டு.
எந்தக் கோவிலிலும் இல்லாத ஒரு வியப்பாக இங்கு மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. இக்கோவில் மண்டபத்தில் சப்த மாதாக்கள் திருவுருவங்கள் செதுக்கப்பட்ட இருக்கின்றன. இக்கோவிலில் நித்யோத்சவம் பெரிய சிறப்புடையதாக இருந்தது. காலத்தின் நிர்ப்பந்தத்தால் 12மாத திருவிழாக்கள் நின்று மூன்று திருவிழாக்கள்தான் நடைபெறுகிறது. இக்கோவில் மேல் மாடத்தில் ஒரே கல்லில் 1008 லிங்கங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளா காட்சியாகும். இக்கோவில் தெற்கு நோக்கியும் சன்னதிகள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.