

புரட்டாசி மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம், பெருமாள் வழிபாடு, சனி பகவான் அவதாரம், மஹாளய பட்சத்தில் முன்னோர்கள் பூமிக்கு வருவது போன்ற நம்பிக்கைகள் விரிவாக கூறப்படுகின்றன. நவராத்திரி, பிரம்மோற்சவம், பல்வேறு விரதங்கள், காகங்களுக்கு உணவு அளித்தல், கடன் கொடுக்காமை போன்ற சடங்குகள் மூலம் திருமணத் தடைகள், நாகதோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும் என விளக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கும் முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உகந்த மாதமாகும். புரட்டாசி மாதம் காக்கும் கடவுள் ஆன மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி வழிபாடு சனி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது.
சனி பகவான் புரட்டாசி சனிக்கிழமையில் அவதரித்ததாக ஐதீகம். சனி தோஷத்தில் இருந்து விடுபட பெருமாளை வணங்குவார்கள்.
பெருமாளுக்கு மாவிளக்கு புளியோதரை பொங்கல் வடை படைத்து வழிபடுவார்கள். அமாவாசைக்கு முந்திய 15 நாட்கள் மஹளய பட்சம் எனப்படும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக ஐதீகம். இவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது நல்லது.
புரட்டாசி முழுவதும் அசைவம் உணர்வை தவிர்த்து சைவ உணவை மட்டுமே உட்கொண்டு இறைவனை வழிபடுவார்கள். புரட்டாசி மாதம் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும். மேலும் புரட்டாசி மாதத்தில் எமனின் கோரை பற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எம பயம், சனி தாக்கம் குறைய விஷ்ணுவை வழிபட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை யாருக்கும் கடன் கொடுக்கவும் அல்லது கடன் வாங்கவோ கூடாது. ஆனால் தர்மம் செய்யலாம்.
புரட்டாசி மாதம் ஜேஷ்டா விரதம், கௌரி விரதம், தசாவதார விரதம், அனந்த விரதம், பிரதமை விரதம், லலிதா விரதம், போன்றவை முக்கியமான விரதங்களாக கடைப்பிடிக்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் கருட வழிபாடு செய்வது சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. சூரியபகவான் உஷா தேவியுடன் சேர்ந்து சனீஸ்வரன் தோன்றியதாக வரலாறு.
மஹாளயம், நவராத்திரி இரண்டும் சேர்ந்து புரட்டாசி மாதத்திற்கு பெருமை சேர்க்கிறது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருப்பதி மலையப்பசாமி தன்னை வெளிப்படுத்திக்கொண்ட தினமாகும்.
பெருமாளுக்கு பாயாசம் பிடிக்கும் என்பதால் பாயாசம் படைத்து வழிபடுவது சிறப்பு. புரட்டாசி மாதத்தில் கால சர்ப்பதோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தார தோஷம் ஆகியவை விலகிவிடும் என்பது ஐதீகம்.
புரட்டாசி சனியன்று காகத்திற்கு உணவு வழங்குவது நன்மை பயக்கும். புரட்டாசி மாதத்தில் பித்ரு வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு, என அனைத்தும் அடங்கியுள்ளது. புதனுக்கு நட்பு கிரகம் சனி. எனவே, புரட்டாசி சனி விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்குவதாக ஐதீகம். இதைத்தான் மஹாளய பட்சம் என்கிறார்கள்.
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பானதாகும். புரட்டாசி சனியில் ஏதாவது ஒரு சனிக்கிழமை திருப்பதி சென்று காணிக்கை வழங்குவது நன்மை பயக்கும். புரட்டாசி மாதம் விரதத்திற்காக மட்டுமே அமைந்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் கடைசி 9 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனைகள் உறவுகளை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில்தான் நவராத்திரி மஹாளய அமாவாசை, பிரதோஷம் அஜா ஏகாதசி போன்ற தினங்கள் வருகிறது.
எனவே, புரட்டாசி மாதம் விசேஷமாக கருதப்படுகிறது. புரட்டாசி மார்கழி இரண்டும் பெருமாளுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் மற்றும் சனி பகவான் மகாலட்சுமி நவராத்திரி போன்றவற்றை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
இந்த பதிவை வாசிப்பதன் மூலம் புரட்டாசி மாதத்தில் பெருமாள் மற்றும் பித்ருக்களின் பரிபூரண அருளைப் பெறுவதற்கான சரியான வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்வதோடு, வீட்டில் செல்வம் பெருகவும் சனி தோஷங்களின் தாக்கம் குறையவும் தேவையான நடைமுறை ஆன்மீக வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.