

1008 சிவலிங்கங்கள் கொண்ட ஓம் கோவில் கட்டடக் கலை ரகசியம்;
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜாடான் கிராமத்தில் உள்ளது இந்த ஓம் வடிவ கோவில். 250 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமையப்பட்டுள்ளது. இந்த ஓம் வடிவ கோவில். 135 அடி உயரமும் 2000 தூண்களும் கொண்டு அமையப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 1008 சிவலிங்கங்களும் 12 ஜோதி லிங்கத்தையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
இங்கு 108 தங்கும் அறைகள் உள்ளன. சூரிய பகவான் கோவில் மற்றும் சந்திரனை குறிக்கும் வகையான பிறை வடிவிலானகுளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது ஓம் வடிவில் இந்த கோவில் மிகத்தெளிவாகத் தெரிகிறது. இந்த கோவில் ஓம் ஆகர் என அழைக்கப்படுகிறது. 1995இல் அடிக்கல் நாட்டப்பட்டு 27 ஆண்டுகள் பணிகள் நடைபெற்று 2023 கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. கோவில் வளாகத்தின் அடியில் 2 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான நீர் தொட்டி உள்ளது.
இதே போன்ற அமைப்பில் உலகில் வேறு எங்கும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கோவில் அயோத்தி ராமர் கோவிலுக்கு இணையாக பேசப்படுகிறது. நாகரா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டு இருப்பது சிறப்பு அம்சமாகும். இந்தக் கோவில் முழுக்க முழுக்க இளம் சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்டுள்ளது.
ஆன்மீகப் பயணிகளைப் பெருமளவில் ஈர்க்கும் ராஜஸ்தான் ஓம் கோவில்;
இக்கோவிலில் உள்ள பிறை வடிவ ஏரி அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதன் மேல் பகுதியில் 108 அடி உயரமுள்ள மினார் உள்ளது. கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய ஆன்மீக மகத்துவத்தை உணர்த்துகிறது. பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் இணைந்த வடிவமே ஓம் எனப்படுகிறது.
தோல் பூரி பன்சி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இளம் சிவப்பு கற்களால் இந்த கோவில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. சுவாமி மகேஸ்வர நந்த பூரிஜா மகாராஜ் இந்த ஆலயத்தை உருவாக்கி உள்ளார். கோவில் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு கீழ் தளமும் மூன்று மேல் தளங்களும் கொண்டது. கோவில் மத்தியில் சுவாமி மாதவா நந்தா நினைவிடம் உள்ளது. இதைச் சுற்றி சப்த ரிஷிகளின் சிலைகள் காணப்படுகிறது.
கருவறையை சுற்றி 200 தூண்களில் பல்வேறு கடவுள்களின் உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கோவில் முழுக்க முழுக்க பன்சி மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட இளஞ்சிவப்பு கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது.
உலகில் இதுபோன்று ஓம் வடிவிலான பிரம்மாண்டமான கோவில் எங்கேயும் காணமுடியாது. இந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக அமையப்பட்டுள்ளது இந்த கோவில். தினசரி எண்ணற்ற பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். நினைத்தது நிறைவேறும் வகையில் இங்குள்ள சிவன் அனைவருக்கும் ஆசி வழங்குகிறார். ராஜஸ்தான் செல்பவர்கள் கண்டிப்பாக இந்த கோவிலை பார்க்காமல் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு அனைவரையும் இந்த கோவில் ஈர்த்து வருகிறது.
இந்த அரிய ஆன்மீகப் பதிவின் மூலம், உலகிலேயே முதன்முறையாகக் கட்டப்பட்டுள்ள ஓம் வடிவக் கோவிலின் வரலாற்றுச் சிறப்புகளையும், அங்குள்ள 1008 சிவலிங்க தரிசன ரகசியங்களையும் துல்லியமாக அறிந்துகொண்டு, உங்களின் அடுத்த ஆன்மீகப் பயணத்தை மிகச்சிறப்பாகத் திட்டமிடுவதற்கான முழுமையான வழிகாட்டலைப் பெறலாம்.
எப்படிச் செல்வது: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் (Indore) விமான நிலையத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தூரில் இருந்து பேருந்து அல்லது வாடகை கார் மூலம் எளிதாகச் செல்லலாம். அருகில் உள்ள முக்கிய இரயில் நிலையம் 'ஓம்காரேஷ்வர் ரோடு' (Omkareshwar Road) ஆகும்.