இதிகாசங்கள் - இவை வெறும் கதையல்ல... பாரதத்தின் அழியா அடையாளங்கள்!

ஒருவேளை உலகம் அழிந்தால்கூட ராமாயணம் மற்றும் மகாபாரதம் நிச்சயமாக நீடித்து வாழும்.
ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள்...
ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள்...
Published on
Deepam strip
Deepam strip

நமது நாட்டில் பல்வேறு புராணங்கள் இருக்கின்றன. அவை உண்மையாக இருக்கலாம் அல்லது கற்பனைக் கதையாக இருக்கலாம். கடவுள் அல்லது அவரது தூதுவர் அல்லது வீரரின் சாகசங்களையும் அவர்கள் சொன்ன நீதி மற்றும் வாழ்க்கை நெறியைச் சொல்வதுதான் புராணம்.

ஆனால் இதிகாசம் என்பது முற்றிலும் வேறுப்பட்டது.

பள்ளி மாணவர்களைக் கேட்டால் மகாபாரதம் மற்றும் ராமாயணம் நமது இதிகாசங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

ஆனால், இது உண்மையாக நடந்ததா? அல்லது வியாசர் மற்றும் வால்மீகி அவர்களின் கற்பனையா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

இதற்கு விடைக்காண, ‘இதிகாசம்’ என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.

முதலில் ‘இதிகாசம்’ என்பது தமிழ் சொல் அல்ல. அது ஒரு சமஸ்கிருத சொல். அதற்கு அர்த்தம் என்ன… ?

இதிகாசம் = இதி + ஹ + ஆஸ. இதற்கு பொருள் என்ன?

‘இவ்வாறு உண்மையாக நடந்தது.’

வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் ‘பழங்காலத்து உண்மையான சரித்திரம்.’

எனவே, இப்போது ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பனை அல்ல என்று தெரியவரும். சமஸ்கிருதம் மற்றும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
மகாபாரதம் உணர்த்தும் நட்பின் 7 பாடங்கள்!
ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள்...

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்…!’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது சமஸ்கிருத வாக்கியமா? தமிழ் வாக்கியமா?

இதற்கு பதில்… இது சுத்தமான சமஸ்கிருத மற்றும் தமிழ் வாக்கியங்களே..!

இதிகாசம் என்பது உண்மையே. அயோத்தி, மதுரா, துவாரகா, யமுனா நதி, ராமேஸ்வரம்… ஏன் சென்னை நந்தம்பாக்கம் சிவன் கோயிலுக்கு ராமர் சென்று வழிப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாசா எடுத்த சாட்டிலைட் புகைப்படத்தில் சேது பாலம் இருந்தது என்பதற்கு சாட்சியாக உள்ளது.

மகாபாரதம் மற்றும் ராமாயணம் நமது பொக்கிஷம்.

ஏனெனில் இரண்டும் கடவுள் பற்றிய கதை. நிஜமாக நடந்தது.

இப்போது ‘இதிகாசம்’ என்றால் நமக்கு அர்த்தம் தெரியும். மேலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் நமது புண்ணிய பாரதத்தில் நடந்தது என்பதும் தெரியும். இந்த இரண்டு இதிகாசங்களில் சொல்லப்படாத அறநெறி, நீதி மற்றும் வாழ்க்கை நெறி என்று எல்லாவற்றையும் போதிக்கிறது. இதுபோல் சிறந்த இதிகாசங்கள் வேறு எங்கும் இல்லை. இது பாரதத்தின் உண்மையான அடையாளம்.

ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு கதைகளும் தெரியும். ஆனால், அந்த இரண்டு இதிகாசங்கள் சொல்வது எதைப்பற்றியது?

ராமாயணம்:

ஸ்ரீ ராமர் மனிதனாக பிறந்து, கடவுளாக வாழ்ந்து காட்டினான்.

மகாபாரதம்:

ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வமாக பிறந்து மனிதனாக வாழ்ந்து காட்டினான்.

இரண்டுமே சிறப்பு. ஸ்ரீ ராமரின் குணங்கள் யாவும் கடவுளின் அம்சங்களாக இருந்தன. ஸ்ரீ கிருஷ்ணர் குணங்கள் யாவும் சிறந்த மனிதரின் குண அம்சங்களே..!

அழிவு:

மகாபாரதம்: துரியோதனன் மண்ணாசையால் மடிந்தான்.

ராமாயணம்: ராவணன் பெண்ணாசையால் அழிந்தான்.

வியாசர் மற்றும் வால்மீகி எழுத்து இந்த உலகம் உள்ளவரை நீடிக்கும். ஒருவேளை உலகம் அழிந்தால்கூட ராமாயணம் மற்றும் மகாபாரதம் நிச்சயமாக நீடித்து வாழும். ஏனெனில் இரண்டும் அதி அற்புத, சிறந்த, கதைகள்.

இதையும் படியுங்கள்:
மஹாபாரதம்; ராமாயணம்... இரண்டு இதிகாசங்களிலும் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யார் யார்?
ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள்...

இரண்டும் சாகா வரம் பெற்றவை.

ஏனெனில் அவை இரண்டும் இதிகாசங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com